Thursday, August 13, 2009

ஈரோட்டிலிருந்து அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ஒரு கடிதம் .

எனது மதிப்பிற்கும் ,
மரியாதைக்கும் உரிய
அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ,
ஈரோட்டிலிருத்து
காந்தி வணக்கத்துடன் எழுதுவது .

அய்யா எனக்கு
புத்தர் ,காந்தி ,மார்க்சு,பெரியார்ன
ரொம்ப உசிருங்க .
உண்மையை உலகிற்கு உணர்த்த
இந்த ப்ளாக்கை ஆரம்பிச்சேனுங்க
இதற்கு
எனது ஆசான்களில் ஒருவரான மாமனிதர் மோகன்தாசின் பெயரில்
எனக்கு வைத்துக்கொண்ட புனைப்பெயர் தாங்க இது
காந்தி .

அய்யா நேற்று (11.08.09 )எங்க ஊருக்கு வந்திருந்தீங்க .
ரொம்ப மகிழ்ச்சிங்க .


அய்யா எங்க ஊருக்கு நீங்க வருவது
இது தானுங்க முதல் தடவைனு நினைக்கின்றேன் .

அதனால எங்க ஊரைப்பத்தி உங்ககிட்ட
ஒரு விசயம் உங்ககிட்ட முதலில் கூற ஆசைப்படுரேங்க .

நாங்கள்ளாம்
( நாமெல்லாம் என்று தானுங்க சொல்லனும் ,
நீங்க உயர்வான இடத்தில இருக்கரதால நாங்கனே
செல்றேன் ,
கோவித்துக்கொள்ளாதீங்க ).
நாங்கள்ளாம்
ரொம்ப பாமரர்களுங்க .
ஆமாங்க ,
எங்காளுங்க உயர்ந்த இடத்திலிருந்து
எதைச்சென்னாலும் உடனே கற்பூரம் மாதிரி கப்புனு புடுச்சிக்குவோம்.
அப்படித்தானுங்க
எங்கமேல மலரிதழ்களை தூவுவதாக
கூறி காலம் காலமா
சாதி ,மதம் ,
மூடப்பழக்க வழக்கங்கள் ,அடிமைத்தனம் இப்படி எண்ணிலடங்கா
குப்பைகளை தூவி
முடியிருந்தனர் உயர்ந்தோர் .
அப்பத்தானுங்க
கலகக்காரர் ஒருத்தர் பிறந்தாருங்க .
அதுவும் பாருங்க 98 வயது வரை
ஒரு கையில் மூத்திரச்சட்டியைத் தூக்கிக்கிட்டு
எங்களுக்கு எங்களின் நிலையை
விளக்கியதோடு ,
எங்களின் அறியாமையை அகற்றவும் ,
அடிமைத்தனம் நீக்கவும் ,
அயராது பாடுபட்டு .
மனிதனை மனிதனாக நினைக்கும்
பக்குவத்தை
விதைத்து ,
குப்பைகளிலிருந்து எங்களை
மீட்டாருங்க .
அவரின் பேச்சால்,எழுத்தால் ,வாழ்வால்.
அவர்தானுங்க பெரியாருங்க .
அவர் பிறந்த ஊரு தாங்க இது .
இங்கு அவர் பிறந்த கட்டில் கூட
இன்னும் இருக்குங்க .
அவர்பயன்படுத்திய பொருட்கள் அத்தனையும் இருக்குங்க இங்கிருக்கும்
அவரின் நினைவகத்தில் .
ஆனால் அய்யா ,இந்த மூடப்பழக்கவழக்கத்தை
அதானுங்க சாமி கும்பிடுரது போன்ற
பழக்கத்தை ஓழிக்கரத்துக்கு
அவர் படாத பாடு பட்டிருக்காருங்க .
இருந்தாலும் இன்னும் பலபேர் அப்படியே
தாங்க அறியாமையிலே இருக்காங்க .


உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா
இவரைப்பற்றி.
ஏன் கோட்கிறேன் என்றால்
மொதமொத எங்க ஊருக்கு வந்திருக்கீங்க
இவரைபற்றி பேசுவிங்கனு
நினைத்தேன் .
நீங்க பேசவே இல்லையே
அதனால் தான் .
அவ்வளவு தாங்க .

அப்புறம் அய்யா ,
தாங்கள் இங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதிமொழி ஒன்று எடுத்துக்கச்சொன்னீர்கள் .
''என்னுடைய வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் 20 நல்ல
புத்தகங்கள் கொண்டு ஒரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன் '' என்று
அது தாங்க
இந்த கடிதத்திற்கு காரணமுங்க .

அய்யா,
உங்களை
வழிகாட்டியாகவும் ,
ஆசானாகவும் ,
வாழ்வில் முன்னேடியாகவும் ,
முதன்மையானவராகவும்
எண்ணற்ற குழந்தைகளும் ,
இளைஞர்களும் எடுத்துக்கொண்டு
நீங்கள் கூறும் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றார்கள் .
நிறைய படித்த பண்பாளர்கள் பலரும் இதில் அடக்கங்க.
அவர்கள் எல்லாம் நேற்றே வீட்டு நூலகம் ஆரம்பித்திருப்பர் .

இதில் சிக்கல் என்னவென்றால் வீட்டு நூலகம் தோறும் அருகில் கட்டயம் பூஜை அறை அல்லது
பிரார்த்தனை அறை இருக்கவேண்டும் என்பது தாங்க .

நடுத்தர பாமர மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் பூஜை அறை அல்லது பிரார்த்தனை
அறை என்பது வீட்டுல இருக்க ஏதே ஒரு அலமாறியில மேல் ரோக்கு தாங்க .
அதுவும் 10க்கு 10 ரூமில.
நீங்க சென்னதால மேல் ரோக்கு ஒரமா வீட்டு நூலகத்தை ஆரம்பிக உத்தேசங்க .
வீட்டுக்கு வரவங்க பேரவங்ககிட்ட புத்தக திருவிழா போயிருந்தேன் அப்துல்கலாம் அய்யா
அவர்கள் வந்திருந்தார் புள்ளக முன்னேற்றத்திற்கு வீட்டு நூலகத்தை ஆரம்பிக சென்னார்
ஆரம்பிச்சிட்டேன் அவரு புத்தகமும் இருக்கு பார் நீங்களும் ஆரம்பிக்க வேண்டியது தானே
என்ற விமரிசனத்துடன் .
அதனால் பலரிடமும் இந்த பழக்கம் தொடர .

மார்க்சு ,பெரியார் புத்தகங்கள் சாமி படத்துக்கு பக்கத்துல வச்சா ஒன்னு சாமி
கோவித்துக்கொள்ளும் அல்லது வரவங்க பேரவங்ககிட்ட ஏயா அறிவிருக்கா ,சாமி கிட்டப்போய்
மார்க்சு , பெரியார் என விமரிசனத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் பகுத்தறிவு
மற்றும் பொது உடைமைச்சித்தாந்தங்கள் கூறும் புத்தகங்கள் வாங்கவதே முதலில் கட் .
சாமியை மகிழ்விக்க தேவாரம் ,திருவாசகம் ,
பகவத் கீதை ,பைபில் ,குரான்
இப்படி சாமி சம்பந்தமான புத்தகங்கள் ஆஜர் .
அவரவர் கோட்பாட்டிற்கு ஏற்ப .
பர்சேசும் அப்படியே .
தினமும் , ஒரு மணி நேரம் நூலகம, பஜனை மடமாக ,மல்டி பர்பஸ்
சாமிக்கு சாமி குப்பிட்டமாதிரியும் ஆச்சு நூலகத்துல படிச்ச மாதிரியும் ஆச்சு .
அவசர உலகந்தானுங்க எங்க டயம் கிடைக்குதுங்க .

இப்படித்தானுங்க
அய்யா நீங்கள் வாங்கிய உறுதிமொழிப்படியான நூலகங்கள் அமையப்போகின்றன,
வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் அமைத்தால் .

அய்யா ,
உங்களின் நோக்கம் மிகவும் உயர்வானது தான் .
ஆனால் ,
அதனை அடைய தாங்கள் கூறிய பாதை தான் மிகமிகத் தவறானதாக உள்ளதாக உணர்ரேங்க .

உலகில்
எந்த ஒரு சிறந்த விசயமாகட்டும் ,
போராட்டமாகட்டும்
உயர்ந்த லட்சியத்தாற்காகத்தான் ஆரம்பிக்கப்படுகிறது .
ஆனால்,
அதனை அவை அடைவதற்கு மேற்கொள்ளும் பாதைத்தவற்றினால் படுமோசமாக
மனித குலத்தை கொண்டுசென்றுவிடுகிறது
என்பது எனது கருத்துங்க .
இதை நாம் உலகினில் பார்த்து தானே வருகின்றேம் .

அய்யா ,
விண்வெளி ராக்கெட்டு விஞ்ஞானியான உங்களுக்கு மனிதனை மனிதனாக்கும் அந்த
மனிதர்களின் கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருக்கலாம் . ஆனால் ,
இப்பொழுது தான் கண் முழித்துவரும் எங்க பாமர சமுதாயத்தை மீண்டும் படுபாதகமதகுழிக்குள்
தள்ளும் இது போன்ற உறுதிமொழிகளை இனி வாங்க வேண்டாமுங்க .
நாங்கொல்லாம் இரணத்துடன் நொந்து நூலாகி ஏதே மேல இப்பத்தான் வந்துக்கிட்டு இருக்கோமுங்க .
உங்களைப்போன்றவர்களே இப்படிப்செய்தால் மனித குல மேன்மைக்காக பாடு பட்ட
மார்க்சு , பெரியார் போன்றவர்களின் பாடெல்லாம் என்னாவது அய்யா.

தயவுசெய்து
நான் செல்லறதுல தப்பிருந்தா தப்புனு செல்லுங்க அய்யா .
திருத்திக்கிறேன் .

தப்பு என தெரிந்தும் திருத்திக்கொள்ளாதவன் உறைந்து விடுவான் ,பின் உடைந்து விடுவான்
என்பது எனது கருத்துங்க .

மற்றபடி ஒன்றுமில்லைங்க அவ்வளவு தாங்க அய்யா .

என
அன்புடன்
காந்தி .


.


.

.


.

8 comments:

priyamudanprabu said...

பெரியார் என்ன சொல்லியும் இன்னும் பலர் மூட பழக்கத்தை விடவில்லை. ஆனால் பெரிய மாற்றம் வந்ததூள்ளது
பெரியாரை போல மீண்டும் ஒருவர் வந்தால்(!!!!) முழுமை அடையும்

priyamudanprabu said...

நல்ல பதிவு வாழ்த்துகள்

காந்தி காங்கிரஸ் said...

நன்றி

பிரியமுடன் பிரபு

நன்றி

minorwall said...
This comment has been removed by the author.
benza said...

காந்தி, உங்க தனித்துவமான சொல்லாமல் சொல்லும் ஸ்ரைல் திறமாக உள்ளது. ஆனால், பெரியார் சொன்னதும் பெரியவர் சொன்னதும் என்னவென பிடிக்காது கச் விட்டிட்டீங்களே.
இருந்தும் உங்களது எழுத்து வன்மையை மெச்சி மகிழ்ந்து வரவேற்கின்றேன்.
பெண்களுக்கு சம உரிமை கொடுக்காத உலக சமயங்களைப் பற்றி கொஞ்சம் தங்களது நடையில் சொள்ளுங்களேன் பிளீஸ்.

சிவாஜி said...

அன்பு நண்பருக்கு வணக்கம்.
சாமி மத அடிப்படையில் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நானும் கூட்டத்தில் பங்கு கொண்டேன். ஆனால் நான் அவர் சொன்னதை இவ்வாறு பார்க்கிறேன். எல்லாரும் தங்களின் வீட்டில் கண்டிப்பாக பூஜை அறை என்று வைத்திருப்பார்கள். சிலர் வீட்டையே பூஜை அறையாக வைத்திருப்பார்கள். பூஜை அறை என நான் கருதுவது, நாம் ஏதோ ஒன்றை பற்றிக் கொண்டும், போற்றிக் கொண்டும், நம்பிக் கொண்டும் வாழ்கிறோம். அந்த வகையில் நீங்களும் இருக்கலாம். இங்கு பிரச்சினை என்னவென்றால் நீங்கள் பெரியாரை நம்புகிறீர்களா அல்லது அவர் நம்பச்சொன்ன பகுத்தறிவை நம்புகிறீர்களா? உங்களுக்கு பூஜை அறையில் கண்டிப்பாக பெரியார் இருப்பார், அவரை நீங்கள் வணங்குவீர்கள்/மதிப்பீர்கள். இல்லையெனில் நூலகம் தான் உங்கள் பூஜை அறையாக இருக்க வேண்டும். இந்த நூலகமும் பூஜை அறையாக அங்கமாக வேண்டும் என்ற நோக்கத்திலே தான் அவர் கூறினார் என கருதுகிறேன். இந்த விசயத்தை தவிர இன்னும் நாம் கவனம் செலுத்த அவர் கூறியதில் நிறைய இருக்கிறது. அவற்றை நீங்கள் இங்கு பதிவிடாதது ஏன்? அவற்றோடு இதையும் சேர்த்து இருந்தீர்களேயானால் படிப்பவர்களுக்கு முழுவதும் காணக் கிடைக்கும்.

முருக.கவி said...

அன்புள்ள ஈரோட்டுக் காந்தி அவர்களுக்கு,
கலாம் ஐயா சொன்னக் கருத்தில் பூசை அறை அல்லது பிரார்த்தனைக் கூடம் என்பதுதானே உங்கள் மனதை நெருடியது. அதற்குப் பதிலாக பகுத்தறிவு பகலவனின் படத்திற்குப் பக்கமாக எனப் பொருள் கொள்ளுங்களேன். அவரவர் அறிவிற்கு ஏற்ப பொருள்
கொள்ளட்டுமே! இன்றைக்கு பெரியார் இருந்திருந்தால் நிச்சயமாக கலாம் ஐயா கூறிய கருத்தினை அமோதித்திருப்பார். அவர் சொன்னா உடனே அதை ஏற்றுக் கொள்வீர்கள்! வாழும் பெரியவர், மனிதருள் மாமனிதர் கலாம். அவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்டு எத்தனைக் கூட்டம் கூடியது. மக்கள் கூற்று சரியானதே!

ஐயா! மெய்ப் பொருள் காணுங்கள்.

minorwall said...

இங்கே நானிட்ட பதிவு சற்று அப்துல்கலாம் அய்யா பற்றி பேசும்போது கொள்ளவேண்டிய மரியாதை நிமித்தமான codes & ethicசை விட்டு விட்டு பேசியதுபோலத்தொன்றினாலும் விவேக் பாணியிலே கொஞ்சம் நகைச்சுவையாக அமையட்டுமே என்றுதான் இந்த நிலை என்று ஒரு சிறு(?) தன்னிலை விளக்கம்.

matterக்கு வருவோமானால் அய்யா கலாம் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் தகுதியோ விமர்சிக்கும் தகுதியோ யாருக்கும் கிடையாது என்பது உண்மைதான்.

என்றாலும் ஈரோட்டுக்குப்போய் விட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சமுதாயசீர்த்திருத்தத்தில் முக்கியப்பங்காற்றி மறைந்த தந்தை பெரியாரைப்பற்றி சற்றும் நினைவுகூராத வகையிலே பேசிச்சென்றிருப்பதை காந்தியார் பதிவிட்டுருப்பதும் அதற்கு மாற்றுக்கருத்தாக சிலர் பதிவிட்டுருப்பதையும் பார்க்கும்போது மனம் சஞ்சலப்படுகிறது.
சற்று தீவிரமாக சிந்தனை செய்து பார்த்தால் ஒருவேளை இந்தியா 2020௦லெ உலக வல்லரசாக மாறியபின் ராமனாதபுரத்திலே ஒரு பொதுக்கூட்டம் நடக்கும்போது அய்யா கலாம் அவரைப்போன்ற பெரும் தகுதிபெற்ற அந்நாளைய தலைவர்(எதிர்காலத்தலைவர்) அய்யா கலாம் அவர்களை பற்றி பேசாமல் போனால் அது அய்யா கலாமின் கனவுக்கு, இந்த தேசத்துக்கு அவர் கொடுத்த தியாகங்களுக்கு அந்நாளிலே அந்த எதிர்காலத்தலைவர் செலுத்தவேண்டிய சரியான மரியாதைதானா?
என்பதை என் பணிவான கேள்வியாக அனைவர்முன்னும் வைக்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால் இந்த தந்தை பெரியாரின் சமுதாயசீர்த்திருத்தத்தின் விளைவினை நிச்சயமாக அய்யா கலாம் இளவயது காலங்களிலே அனுபவிக்காமல் இருந்திருக்கமாட்டார்.(தமிழ்நாட்டில் எவருமே விதிவிலக்கல்ல.)அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யாரும் குடியரசுத்தலைவர் ஆவதென்பது சாத்தியமில்லாத விஷயம்.அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சி பெரியாரின் கொள்கைக்கு எதிரிடை கொள்கை கொண்டதனால் இந்த மனப்போக்குக்கு உள்ளாகி பெரியாரின் பேச்சை தவிர்த்திருக்கலாம்.அவருக்கு சங்கடமான நிலைதான். (ஆனால் பெரியார் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டவர்.சமுதாய சீர்த்திருத்தச்செம்மல்.)எல்லாமே கால சூழல்.
யாரை விட்டுவைத்தது?

Post a Comment

Blog Widget by LinkWithin