Friday, February 5, 2010

மும்பை யாருக்கு சொந்தம் - அரசுக்கு ஒரு யோசனை .


அச்சம்
.....,அச்சம்..... ,அச்சம் ......
சுதந்திரத்தை சுதந்திரமாக சுவாசிக்கமுடியத மும்பைவாசிகளாக .இதனால் மக்கள் அடையும்
மனரீதியான பாதிப்புகள் கணக்கிலடங்கா.அதோடு மட்டுமல்லாமல் இதனால் நமது நாட்டிற்கு
ஏற்படும் பொருளாதார பின்னடைவை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.இது நமது நாடு
இங்கு உள்ள அனைத்தும் நாமனைவருக்கும் சொந்தம் .
நாமனைவரும் கட்சிசார்பின்றி ஒற்றுமையாக இருந்து பிரிவினை பேசுகின்றவர்களை
எதிர்த்தால்தான் நாம் நாமக்கு கிடைத்த சுதந்திரத்தை சுதந்திரமாக சுவாசிக்கமுடியும்
.எனவே,நாமனைவரும் சொந்தம் கொண்டாடும் கூட்டத்தினரின் செயல் தவறு என்று நமது கடுமையான
கண்டனத்தை பத்திரிக்கைகள் ,வலைகள் ,தொலைக்காட்சிகள் ,ப்ளாக்குகள்,குறுஞ்செய்திகள் ,கடிதங்கள்
வாயிலாக இந்தியாவிலுள்ள அனைத்துப்பகுதிகளிலிருந்தும் ;வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட
அனைத்து இந்தியர்களும் இந்தியர்களாக ஒன்றுபட்டு தெரிவித்தால் இத்தகைய சிறுமதி கூட்டம்
தங்களின் வாலாட்டத்தை நிறுத்திக்கொள்ளும். இதைப்படிப்பவர்கள் அனைவரும் இதனைச்செய்வீர்கள் என
நம்புகின்றேன் .

நானும் எனது கடுமையான கண்டனத்தை இதன் முலம் தெரிவித்துக்கொள்கின்றேன் .

அதோடு அரசுக்கும் ஒரு யோசனையை இதன்முலம் முன்வைக்கின்றேன். இது போன்ற பிரச்சனைகள்
எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் இருக்க மக்கள்தொகையை 50 லட்சத்தைத்தாண்டிய அனைத்து
பெருநகரங்களையும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குட்பட்ட தனி மாநிலமாக
ஆக்கிவிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாகவும் இருக்கும் மக்களும்
அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வர் .


.

.

.


Saturday, December 5, 2009

செல்போன் விளைவிக்கும் மனிதப்படுகொலைகள்

.


ஒவ்வொரு
அறிவியல் கண்டுபிடிப்பும்
மக்களின் நல்வாழ்விற்கே .
ஆயினும் ,
அதனை பயன்படுத்தும்
மனிதனின் செயல்பாடுகளால்
மனித சமுதாயத்திற்கே
அது
மிகப்பெரிய ஆபத்தாக
முடிவதுடன்
பல
மனிதப்படுகொலைகளையும்
நிகழ்த்தி விடுகின்றது .


இன்றைக்கு
நம்மிடம்
எது இருக்கின்றதோ ,இல்லையோ ,
ஆனால் ,
செல்போன் ஒன்று இருக்கின்றது .
செல்போன்
மிக நல்ல
பயனுள்ள
கண்டுபிடிப்பு தான்,
ஆனால் ,
அதனை
நாம்
வாகன ஓட்டியாக இருந்து
பயன்படுத்தும் பொழுது
ஏற்படும்
பேராபத்தை
வேதாரண்ய வேதனைகள்
உணர்த்தியுள்ளது .


சம்பவம் பற்றி
நேரில் பார்த்த
ஒரு குழந்தை
கூறிய விதத்திலிருந்து
செல்போன் விளைவித்தது
மனிதப்படுகொலையே
என்பது உறுதியாகிறது .

இப்படிப்பட்ட மனிதப்படுகொலைகள்
இனியும் நடக்கக்கூடாது ,
இதனை
நாம்
கட்டாயம்
தடுக்க வேண்டும்.

இல்லாதுபோனால்
நாம்
மனிதர்களே அல்லர் .

அதனால் ,

அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்


முதலாவதாக

இந்த தவற்றை நாம் செய்யவேகூடாது .
இதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்.


இரண்டாவதாக
அரசிடம் ,
நாம் ,

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி ,
அதன் விளைவாக
பிறருக்கு மரணம் விளைவித்தால் ,
மரணம் விளைவிக்கின்ற எவரொருவருக்கும்
10 ஆண்டுகள் வரை
சிறை காவல் தண்டனையும் விதிக்கவேண்டும் என்றும் ,
அவரின் உரிமத்தை
உடனே ரத்து செயவததுடன் ,
செல்போன் உபயோகிக்க தடையும் ,
வாகனங்கள்
மற்றும்
சிம்கார்டுகள் வாங்க
தடையும்விதிக்குப்படும் என்றும் ,

இது தவிர்த்து ,
சாதாரணமாக செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால்
(மரணம் விளைவிக்காமல்)
வாகனங்களை இயக்குபவருக்கு ,
அவரின் உரிமத்தை
உடனே ரத்து செய்தும் ,
மேலும்
3 ஆண்டுகள்
செல்போன் உபயோகிக்க தடையும் ,
வாகனங்கள்
மற்றும்
சிம்கார்டுகள்
வாங்க தடையும்
விதிக்குப்படும்
எனவும்
சட்டம் இயற்ற வேண்டும்
என
கோரிக்கைகளை
வைக்கவேண்டும் ,

மேலும்,
தனதுயிரை
கொடுத்து
பச்சிளம்
குழந்தைகளின்
இன்னுயிர்
காக்க
போராடி
தன்னுயிரை
பொறுட்படுத்தாது
மாய்ந்த
மாதரசி ,
கண்ணகிக்கு நிகரான
தியாக செம்மல்
மாதரசி
சுகந்தி
அவர்களின்
பெயரில்
இனி
வரும் காலங்களில்
நல்லாசிரியர் விருதை
வழங்கவேண்டும்
என்றும் ,
அவருக்கு
உரிய
அரசு மரியாதை
செலுத்த வேண்டும்
என்றும்

வேண்டுகோள் விடுக்கவேண்டும் .

மேலும் ,
கல்வி நிறுவனங்களில்
இயங்கும் வாகனங்கள்
சாதாரணமாக
40 KM/hr வேகத்திற்கு மேல்
செல்ல தடைவிதிக்கவேண்டும்,
என்றும்

25 KM/hr வேகத்திற்கு மேல்
நகர் பகுதிக்குள்
செல்ல தடைவிதிக்கவேண்டும்,
என்றும் ,

கோரிக்கைகளை வைக்கவேண்டும் .

இதன் முலம் ,
நாம்
இறந்த
அந்த
பச்சிளம் குழந்தைகளின்
இறப்பிற்கும் ,
தன்னுயிரை
நீத்த
தாரகையின்
இறப்பிற்கும்
பிரயச்சித்தம்
தேடியவர்களாவோம் .


.

.


.


.


Saturday, October 10, 2009

சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் ...

"நூறு மருத்துவர்கள் மத்தியில்
இறந்து கொண்டிருக்கின்றேன்" -அலெக்சாண்டர் தி கிரேட்.

"கோடி மருத்துவர்கள் மத்தியில்
கூனி வலியுடன் வாழ்கின்றோம் "- காந்தி காங்கிரஸ் .

சென்ற செப்டம்பர் மாதம் 3-ம் தேதி மதியம்
கோர்ட்டில் வழக்கு விவாதத்திற்குஅமர்ந்திருந்த
பொழுது வலது காலில் தாங்க முடியாதபடி பயங்கர வலி உடனேடாக்டரைப்பார்த்தேன் .
அவர் இப்பொழுதுதான் ஆரம்பம்
காய்ச்சல் 100 இருக்கு
நல்ல ரெஸ்டு எடுங்க என்றவர்
PARACETAMOL மாத்திரை மட்டும்
2 நாளைக்கு 3 வேளை சாப்பிட எழுதிக்கொடுத்தார் .
எனக்கு ஒன்றும் புரியவில்லை .
வீட்டிற்கு வந்த பிறகு காய்ச்சல் 104 யை
தொட்டது .
அதே நிலை 2 நாட்கள் நீடித்தது .
கை,கால் மற்றும் உடம்பில் JOINT னு
எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம்
தாங்க முடியாதபடி பயங்கர வலி .
டாய்லட் போனால்
எழுத்திருக்கவே முடியாத நிலை
அவ்வளவு வலி .
மேலும் ,
நடந்தால்,
உடல் நிலத்தை நோக்கி கூன் விழுந்த மனிதர் போல்தான் நடை .
டாக்டரை தினமும் பார்த்தேன் .
2 நாளில் காய்ச்சல் போய்விட்டது .
ஆனால் ,
கை,கால் மற்றும் JOINT வலி
இன்னும் போகவில்லை .
நடப்பதற்கே மிகவும் கடினமாக உள்ளது .
எந்த வேலையையும் சரியாக செய்யமுடிவதில்லை .
சோர்வாகவே தினம் கழிகின்றது .

இது பற்றி எனது மருத்துவ நண்பர்களை
கேட்ட பொழுது தயங்கிய படி
சில திடுக்கிடும் உண்மைகள் சென்னார்கள் .

இந்த நோய்க்குப் பெயர் சிக்கன் குனியாவாம் .
1952-ல் ஆப்பிரிக்காவில் இருப்பது அறியப்பட்டது .
2005-ல் இருந்து இந்தியாவில் அறியப்படுகின்றதாம் .
வைரஸ்களால் ஏற்படும்
இந்த நோய்
மருந்து மாத்திரைகள் எடுக்காமலே
காய்ச்சல் போய்விடும் .
ஆனால் JOINT வலி
அவரவர் உடல் வாகிற்கு ஏற்ப இருக்குமாம் .
எனது நண்பர் சென்னார்
அவருக்கு 3 வருடங்களாக வலி உள்ளதாம் .

காய்ச்சல் வந்து உடனே போய்விடுவதாலும் ,
இந்த நோய் இருப்பதாக ஒத்துக்கொண்டால்
சர்வதேச சமுகத்தினின்று
ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தினாலும்
அரசு இந்நோயை கண்டுகொள்வதில்லையாம் .

இந்த நோய் வந்தால்
மனிதனால் இயங்கவே முடிவதில்லை .
மிகவும் கடினமாக இருக்கின்றது .
ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள்
ஏற்கனவே கடின வாழ்வு வாழ்ந்து கொண்டு வரும் நிலையில்
இந்த நோயுடன் எப்படி காலத்தை கடத்துகின்றனரோ .
அவர்கள் மனிதாபிமானமில்ல மனிதர்களிடம்
வதைபடுவதோடு மட்டுமல்லமல்
கிருமிகளாலும் வதைபடுவதை நீனைக்கும்
பொழுது ,
என்ன உலகமடா ? .

(Following are the countries from where Chikungunya infection is
reported (as of March 2008),
Benin,Burundi,Cambodia,Cameroon,Central African Republic,
Comoros,Congo,East Timor,Gunea,India,Indonesia,Italy,Kenya,Laos
,Madagascar,Malawi,Malaysia,Mauritius,Mayotte,Myanmar,Nigeria
,Pakistan,Philippines,Senegal,Seychelles,Singapore,South Africa
,Srilanka,Sudan,Taiwan,Tanzania,Thailand,Uganda ,Vietnam
Zimbabwe.)


அதே போல் தான் ,
எங்க ஊரிலும்
அன்னாடும் காய்ச்சிகள் அதிகம் பேருக்கு
இந்த நோய் பரவியுள்ளது .
உழைக்கவும் முடியாமல் ,
வருமானமும் இன்றி ,
கடின வலியுடன் நகர்ந்து
கொண்டிருக்கின்றனர்
கூனி குருகி
எங்களின் ஈரோடு பகுதியைச்சுற்றி மட்டும்
சுமார் 5 லட்சம் பேர் .
இந்தியா முழுவதும் ....!!! ????.
இதைப்பற்றி யாருக்கும் இதுவரை எந்த அக்கறையும் இல்லை .
அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை .
அரசும் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை .
அரசு இந்நோயை ஒத்துக்கொள்வதும் இல்லை
என்கின்றனர் விசயம் தெரிந்த மருத்துவர்கள் .

அரசு கண்டு கொண்டால் தான் ,
ஒத்துக்கொண்டால் தான்
இந்நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்க ஏதுவாகும் .
இதைத்தவிர்த்தால்
மனிதனின் ஆற்றல் எல்லாம்
சிக்கன் குனியா நோய்
ஏற்படுத்தும் கூனலுக்குல் தீர்ந்துவிடும் .

எனக்கென்னவோ
இன்றுள்ள அரசுகள்
'பெரும்பான்மை பேராசைக்காரர்கள் அமைப்பாக '
இருப்பதால்தான்
இத்தகைய நோய்கள் பற்றி கண்டு கொள்ளாமல்
அலட்சியப்படுத்துகின்றது எனத்தேன்றுகிறது .

'மக்களின் மீது அதிக அக்கறை கொண்ட அரசே
உயர்ந்த லட்சியம் கொண்டகுடிமக்களைப்பெற்றிருக்கும்'.

இன்று நாமுள்ள நிலையில்
சந்திரனுக்கு குடியேறுவதற்கும் ,
அணு ,ஆயுதம் தயாரிப்பதற்கும்
செலவிடும் தொகைகள்
யாருக்குப்பயன் அளிக்கப்போகிறது
எனத்தெரியவில்லை.
ஆனால் , அவைகள்
இந்த நோய்வாய்ப்பட்டவர்களின்
இரத்தத்திலிருந்தும் உரிஞ்சப்பட்டவைகள்
என்பது தான் நிதர்சனமான உண்மை .

நமது இந்தியாவைப் பொறுத்தவரை
மருத்துவத்துறை மிகவும் பலகினமாகவே இருக்கிறது.
இந்தியாவின்
சீதோசனநிலை மற்றும் நோய்கள்
பற்றிய சரியான படிப்பினை இங்கு இல்லை .
மேலும்,
இங்கு ஆராய்ச்சிகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .
மேலை நாடுகள்
ஏதாவது கண்டுபிடித்தால்
அதை வழிமொழிவதாகவே இருக்கிறது .
மருத்துவத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
உட்கருத்து ஊட்டப்பட்டே
படிப்பையும்,தொழிலையும் தொடங்குகின்றனர் .
அர்பணிப்புத்தன்மை அரசுக்கும் கிடையாது ,
மருத்துவத்துறையிலும் கிடையாது .
இவர்கள் உருவாக செலவிடப்படும் தொகை
இந்த நோய்வாய்ப்பட்டவர்களின் இரத்தம் .
அதை அவர்கள் உணர்வது கூட இல்லை .
ஒரு சிலரின் அர்ப்பணிப்பால் மட்டுமே ஏதோ
இத்துறை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .

எனக்குத் தெரிந்து
விஞ்ஞானிகள் எனக்கூறிக்கொள்வோர்
ஏழை மற்றும் வளர்ந்து வரும்நாடுகளில்
ஏற்படும் நோய்கள் பற்றி
கண்டுகொள்வதாகத்தெரியவில்லை .
அவர்களுக்கு
வளர்ந்த நாடுகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆய்வில்
அதிக வருமானம் ,
பேர்,
புகழொடு
மதிப்பும் ,
கௌரவமும் அளிக்கப்படுவதால்
ஏழை நாட்டில் வாழும் மனிதர்களை மனிதர்களாக
பார்க்கமுடியாமல் இருக்கலாம் .
ஆனால் ,
இந்தப்போக்கு வருத்ததை அளிக்கின்றது .

நோய் என்பது அனைவருக்கும் பொதுவானது .
இன்று ஏழை நாடுகளுக்கு வந்துள்ளது .
நாளை வளர்ந்த நாடுகளே உமக்கும் வரலாம் .
ஆதலால் ,
மனிதகுலம் காக்கும் விசயத்தில்
எமக்கு ,உமக்கு
என பாரபட்சம் பார்க்காமல்
சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகமாக உருமாறி
அனைவருக்கும் பயன்படும் வகையில்
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க
ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டுகின்றேன் .
இல்லாது போனால்
மனிதகுலம் நோயுற்று முடமாகி போகும் .

இறுதியாக ,
சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் என்னவெனில,
எங்களுரில் பரவிவரும் இந்த நோய்க்கு
உங்களில் யாராவது
உரிய மருந்து கண்டுபிடிப்பீர்கள் எனில்
நாங்கள் அனைவரும்
உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம் .
மனித குலம் முழுவதும்
உமக்கு கடைமைப்பட்டவர்களாவோம் .

Thursday, August 13, 2009

ஈரோட்டிலிருந்து அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ஒரு கடிதம் .

எனது மதிப்பிற்கும் ,
மரியாதைக்கும் உரிய
அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ,
ஈரோட்டிலிருத்து
காந்தி வணக்கத்துடன் எழுதுவது .

அய்யா எனக்கு
புத்தர் ,காந்தி ,மார்க்சு,பெரியார்ன
ரொம்ப உசிருங்க .
உண்மையை உலகிற்கு உணர்த்த
இந்த ப்ளாக்கை ஆரம்பிச்சேனுங்க
இதற்கு
எனது ஆசான்களில் ஒருவரான மாமனிதர் மோகன்தாசின் பெயரில்
எனக்கு வைத்துக்கொண்ட புனைப்பெயர் தாங்க இது
காந்தி .

அய்யா நேற்று (11.08.09 )எங்க ஊருக்கு வந்திருந்தீங்க .
ரொம்ப மகிழ்ச்சிங்க .


அய்யா எங்க ஊருக்கு நீங்க வருவது
இது தானுங்க முதல் தடவைனு நினைக்கின்றேன் .

அதனால எங்க ஊரைப்பத்தி உங்ககிட்ட
ஒரு விசயம் உங்ககிட்ட முதலில் கூற ஆசைப்படுரேங்க .

நாங்கள்ளாம்
( நாமெல்லாம் என்று தானுங்க சொல்லனும் ,
நீங்க உயர்வான இடத்தில இருக்கரதால நாங்கனே
செல்றேன் ,
கோவித்துக்கொள்ளாதீங்க ).
நாங்கள்ளாம்
ரொம்ப பாமரர்களுங்க .
ஆமாங்க ,
எங்காளுங்க உயர்ந்த இடத்திலிருந்து
எதைச்சென்னாலும் உடனே கற்பூரம் மாதிரி கப்புனு புடுச்சிக்குவோம்.
அப்படித்தானுங்க
எங்கமேல மலரிதழ்களை தூவுவதாக
கூறி காலம் காலமா
சாதி ,மதம் ,
மூடப்பழக்க வழக்கங்கள் ,அடிமைத்தனம் இப்படி எண்ணிலடங்கா
குப்பைகளை தூவி
முடியிருந்தனர் உயர்ந்தோர் .
அப்பத்தானுங்க
கலகக்காரர் ஒருத்தர் பிறந்தாருங்க .
அதுவும் பாருங்க 98 வயது வரை
ஒரு கையில் மூத்திரச்சட்டியைத் தூக்கிக்கிட்டு
எங்களுக்கு எங்களின் நிலையை
விளக்கியதோடு ,
எங்களின் அறியாமையை அகற்றவும் ,
அடிமைத்தனம் நீக்கவும் ,
அயராது பாடுபட்டு .
மனிதனை மனிதனாக நினைக்கும்
பக்குவத்தை
விதைத்து ,
குப்பைகளிலிருந்து எங்களை
மீட்டாருங்க .
அவரின் பேச்சால்,எழுத்தால் ,வாழ்வால்.
அவர்தானுங்க பெரியாருங்க .
அவர் பிறந்த ஊரு தாங்க இது .
இங்கு அவர் பிறந்த கட்டில் கூட
இன்னும் இருக்குங்க .
அவர்பயன்படுத்திய பொருட்கள் அத்தனையும் இருக்குங்க இங்கிருக்கும்
அவரின் நினைவகத்தில் .
ஆனால் அய்யா ,இந்த மூடப்பழக்கவழக்கத்தை
அதானுங்க சாமி கும்பிடுரது போன்ற
பழக்கத்தை ஓழிக்கரத்துக்கு
அவர் படாத பாடு பட்டிருக்காருங்க .
இருந்தாலும் இன்னும் பலபேர் அப்படியே
தாங்க அறியாமையிலே இருக்காங்க .


உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா
இவரைப்பற்றி.
ஏன் கோட்கிறேன் என்றால்
மொதமொத எங்க ஊருக்கு வந்திருக்கீங்க
இவரைபற்றி பேசுவிங்கனு
நினைத்தேன் .
நீங்க பேசவே இல்லையே
அதனால் தான் .
அவ்வளவு தாங்க .

அப்புறம் அய்யா ,
தாங்கள் இங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதிமொழி ஒன்று எடுத்துக்கச்சொன்னீர்கள் .
''என்னுடைய வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் 20 நல்ல
புத்தகங்கள் கொண்டு ஒரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன் '' என்று
அது தாங்க
இந்த கடிதத்திற்கு காரணமுங்க .

அய்யா,
உங்களை
வழிகாட்டியாகவும் ,
ஆசானாகவும் ,
வாழ்வில் முன்னேடியாகவும் ,
முதன்மையானவராகவும்
எண்ணற்ற குழந்தைகளும் ,
இளைஞர்களும் எடுத்துக்கொண்டு
நீங்கள் கூறும் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றார்கள் .
நிறைய படித்த பண்பாளர்கள் பலரும் இதில் அடக்கங்க.
அவர்கள் எல்லாம் நேற்றே வீட்டு நூலகம் ஆரம்பித்திருப்பர் .

இதில் சிக்கல் என்னவென்றால் வீட்டு நூலகம் தோறும் அருகில் கட்டயம் பூஜை அறை அல்லது
பிரார்த்தனை அறை இருக்கவேண்டும் என்பது தாங்க .

நடுத்தர பாமர மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் பூஜை அறை அல்லது பிரார்த்தனை
அறை என்பது வீட்டுல இருக்க ஏதே ஒரு அலமாறியில மேல் ரோக்கு தாங்க .
அதுவும் 10க்கு 10 ரூமில.
நீங்க சென்னதால மேல் ரோக்கு ஒரமா வீட்டு நூலகத்தை ஆரம்பிக உத்தேசங்க .
வீட்டுக்கு வரவங்க பேரவங்ககிட்ட புத்தக திருவிழா போயிருந்தேன் அப்துல்கலாம் அய்யா
அவர்கள் வந்திருந்தார் புள்ளக முன்னேற்றத்திற்கு வீட்டு நூலகத்தை ஆரம்பிக சென்னார்
ஆரம்பிச்சிட்டேன் அவரு புத்தகமும் இருக்கு பார் நீங்களும் ஆரம்பிக்க வேண்டியது தானே
என்ற விமரிசனத்துடன் .
அதனால் பலரிடமும் இந்த பழக்கம் தொடர .

மார்க்சு ,பெரியார் புத்தகங்கள் சாமி படத்துக்கு பக்கத்துல வச்சா ஒன்னு சாமி
கோவித்துக்கொள்ளும் அல்லது வரவங்க பேரவங்ககிட்ட ஏயா அறிவிருக்கா ,சாமி கிட்டப்போய்
மார்க்சு , பெரியார் என விமரிசனத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் பகுத்தறிவு
மற்றும் பொது உடைமைச்சித்தாந்தங்கள் கூறும் புத்தகங்கள் வாங்கவதே முதலில் கட் .
சாமியை மகிழ்விக்க தேவாரம் ,திருவாசகம் ,
பகவத் கீதை ,பைபில் ,குரான்
இப்படி சாமி சம்பந்தமான புத்தகங்கள் ஆஜர் .
அவரவர் கோட்பாட்டிற்கு ஏற்ப .
பர்சேசும் அப்படியே .
தினமும் , ஒரு மணி நேரம் நூலகம, பஜனை மடமாக ,மல்டி பர்பஸ்
சாமிக்கு சாமி குப்பிட்டமாதிரியும் ஆச்சு நூலகத்துல படிச்ச மாதிரியும் ஆச்சு .
அவசர உலகந்தானுங்க எங்க டயம் கிடைக்குதுங்க .

இப்படித்தானுங்க
அய்யா நீங்கள் வாங்கிய உறுதிமொழிப்படியான நூலகங்கள் அமையப்போகின்றன,
வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் அமைத்தால் .

அய்யா ,
உங்களின் நோக்கம் மிகவும் உயர்வானது தான் .
ஆனால் ,
அதனை அடைய தாங்கள் கூறிய பாதை தான் மிகமிகத் தவறானதாக உள்ளதாக உணர்ரேங்க .

உலகில்
எந்த ஒரு சிறந்த விசயமாகட்டும் ,
போராட்டமாகட்டும்
உயர்ந்த லட்சியத்தாற்காகத்தான் ஆரம்பிக்கப்படுகிறது .
ஆனால்,
அதனை அவை அடைவதற்கு மேற்கொள்ளும் பாதைத்தவற்றினால் படுமோசமாக
மனித குலத்தை கொண்டுசென்றுவிடுகிறது
என்பது எனது கருத்துங்க .
இதை நாம் உலகினில் பார்த்து தானே வருகின்றேம் .

அய்யா ,
விண்வெளி ராக்கெட்டு விஞ்ஞானியான உங்களுக்கு மனிதனை மனிதனாக்கும் அந்த
மனிதர்களின் கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருக்கலாம் . ஆனால் ,
இப்பொழுது தான் கண் முழித்துவரும் எங்க பாமர சமுதாயத்தை மீண்டும் படுபாதகமதகுழிக்குள்
தள்ளும் இது போன்ற உறுதிமொழிகளை இனி வாங்க வேண்டாமுங்க .
நாங்கொல்லாம் இரணத்துடன் நொந்து நூலாகி ஏதே மேல இப்பத்தான் வந்துக்கிட்டு இருக்கோமுங்க .
உங்களைப்போன்றவர்களே இப்படிப்செய்தால் மனித குல மேன்மைக்காக பாடு பட்ட
மார்க்சு , பெரியார் போன்றவர்களின் பாடெல்லாம் என்னாவது அய்யா.

தயவுசெய்து
நான் செல்லறதுல தப்பிருந்தா தப்புனு செல்லுங்க அய்யா .
திருத்திக்கிறேன் .

தப்பு என தெரிந்தும் திருத்திக்கொள்ளாதவன் உறைந்து விடுவான் ,பின் உடைந்து விடுவான்
என்பது எனது கருத்துங்க .

மற்றபடி ஒன்றுமில்லைங்க அவ்வளவு தாங்க அய்யா .

என
அன்புடன்
காந்தி .


.


.

.


.

Monday, August 10, 2009

பெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே .

.


நேற்று ஈரோட்டில்
''பெரியாரின் எழுத்துக்கள் பற்றிய சர்ச்சை குறித்த''
பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்தேன் .
காலில் விலங்கிடப்பட்ட
பெரியாரின் கோலத்தை , பேச்சாளர்களின் இருக்கைகளின் பிண்ணனியில் ஒலியூட்டப்பட்டு
இருப்பது கண்டு ஆடிப்போனேன். அப்பொழுது அன்பர் ஒருவர் எனது கையில் சிற்றறிக்கை
ஒன்றை கொடுத்தார் .
அதில் ''குமுதம் '' வெளியிட்டிருந்த
கேலிச்சித்திரத்தை கண்டேன் .
மண்டை சுறப்பை ஏதோ அரித்தது .


ஒரு பகுத்தறிவாளரை ,
மனிதனை மனிதனாக மாற்ற நினைத்த மாந்தரை ,
சுதந்திரக்காற்றை ,
அறியாமை விலங்கொடிக்க பாடுட்டவரை -''கால் விலங்கி்ட்டு'' . வெம்பினேன்.
என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று இது .
அது கண்டு பெரியாரின் உண்மைத்தொண்டர்களாகிய நாம்
பெரியாருக்கு விலங்கிட நீ யார் ? உனக்கு என்ன தைரியம் ,அந்த தைரியத்தைக் கொடுத்து
யார் ?
எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் ,அதை பயன்படுத்தி பகுத்தறிவுப்பகல்வனை விலங்கிட்டு
அவமானப்படுத்துகிறாய் என குமுறி இருக்கவேண்டாமா ?.
எது எப்படியிருந்தாலும் பெரியாரை விலங்கிட நாம் அனுமதிக்கலாமா ?.
இது பகுத்தறிவா ?,
நாகரிகமா ?.
சரிதானா ?.
முறைதானா ? .


அது தவிர்த்து ,
மேடைக்கு மேடை
''காலில் விலங்கிடப்பட்ட பெரியாரின் கோலத்தை ,பேச்சாளர்களின் இருக்கைகளின்
பிண்ணனியில் ஒலியூட்டி ,சிற்றறிக்கையிலும் கொடுப்பது ''
மானமுள்ள
தமிழர்களாக ,பகுத்தறிவாளர்களாக நம்மை ஆக்கிய
பெரியாருக்கு
நாம் கொடுக்கும் மரியாதையாக எனக்குத் தெரியவில்லை .


உண்மையில்
நாம் பகுத்தறிவாளர்கள் தானா ?.
என்ற கேள்வியே என்னுள் எழுகிறது .

மாபெரும் அவமானம் பெரியாருக்கு - என அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன்.


இந்தப்பதிவின் முலம்
பெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே.

இப்படிப்பட்ட தவறினை இனி் செய்யவேண்டாம் என எனதருமைச் சகோதரர்களை கேட்டுக்கொள்கின்றேன் .

''குமுதத்தை ''
இதன் முலம் மிகவும் வண்மையாகக் கண்டிக்கின்றேன் .


.

.

.


Wednesday, August 5, 2009

ஈரோடு புத்தகத்திருவிழாவும், குழந்தைகள் புத்தகக்கண்காட்சியும் .

ஒரு அறிஞர்
சிஷ்யர்களுடன் மார்கெட்டுக்கு போனாராம் .
அங்கு இருக்கும் அனைத்துப்பொருள்களையும்
விசாரித்து ஆழ்ந்து பார்த்து விலையும்
கேட்டு தெரிந்துகொண்டு
பின் எதுவும் வாங்கமல் திரும்பினாராம் .
ஒன்றும் வாங்காமல் அது குறித்து
ஏன் இத்தனை விசாரணைகள் என
வினவியதற்கு தேவையில்லாதவைகள்
எத்தனை உண்டு என
தெரிந்துகொள்ளவேண்டி என்றாராம் .
அந்த அறிஞர் கதைதான்
'புத்தகத்திருவிழா'விற்குச் செல்லும்
எனது கதையும் .
தேவையில்லாதது
எவ்வளவு இருக்கின்றது என்பதைக்காணவும்.

முன்பொல்லாம் ஈரோட்டில் மாதம்
ஒரு இலக்கியச்சந்திப்புக்கள் நடக்கும் .
இதே வ.உ.சி .பூங்காவில்
வாராந்திரக்கூட்டமும் நடக்கும் .
கடந்த 5,6 வருசம எதுவும் முன்போல்
நடப்பதில்லை .
அப்படியே நடந்தாலும்
எண்ணி 6,7 நபர்கள் ,அதிலும் சிலர் மட்டும்
கட்டாயம் ஆஜராகி இருப்பர்
எல்லா வேலையையும் விட்டுவிட்டு.
20,25 பேர்கள் வந்துவிட்டால்
மிகவும் மகிழ்ந்து போவோம் .
நண்பர்களைக்காண வாய்ப்புகள்
இல்லாமல் இருந்தது .
' புத்தகத்திருவிழா'
நண்பர்களைக்காண ஒரு இடமாக
ஆகிவிட்டதாலும்
சென்று வருவேன் .

கடந்த 03.08.2009 அன்று
' புத்தகத்திருவிழா' செல்லலாம்னு
கிளம்பினேன் .
குட்டிப்பாப்பா L.K.G
படிக்கிறாள் .
நானும் வரேனு சொல்ல
கூட்டிக்கிட்டு போனோன் .
வண்டியில் செல்லும்பொழுதே
என்ன பாப்பா வாங்கப்போறனு கேட்டேன்
யானை புத்தகம்னு சென்னாள் .
சந்தோசம
யானை ...யானைனு பாடிக்கிட்டு வந்தாள் .
வண்டிய பாஸ் போட்டுட்டு கிளம்பும்போது
என் கையை இருக்க பிடித்துத்தாள் ,
அவளைப்பார்த்தேன் ,
கூட்டத்தைப்பார்த்து ஏதே
அச்சப்படுவதை உணர்ந்தேன் .
கூட்ட இடிபாடுகளில்
நாமே திக்குமுக்காட
குழந்தை அவஸ்தைப்படுவதை உணர்ந்தேன் .
என்னைப்பார்த்து
பொம்மை வேண்டும் என்றாள் .
இங்கிருப்பதை அவள் விரும்பவில்லை
என்றஅவளின் நிலையை உணர்ந்து
வெளியேவந்துவிட்டேன் .
பொம்மை எங்கு வாங்க என்றேன் .
கண்மணியில என்றாள் .
யானை பொம்மை வாங்கினால்
மிகவும் மகிழ்ச்சியாக .
யானை புத்தகம் என்றேன்
வேண்டாம் என்றாள் விரக்தியாக .

புத்தகத்திருவிழாவிற்கு சென்றீர்களா ,
எத்தனை நாள் சென்றீர்கள் ,
எத்தனை புத்தகம் வாங்குனீங்க ,
அவ்வளவு தானா ...
நான் நேத்து போனேன் பேமிலியோட,
1000 க்கு புத்தம் வாங்கினேன் ...
நேரமே இல்லை மெட்ராசில பாத்துக்கிறேன் ,
மிஸ் நேத்து பாப்பாவேட
புத்தகத்திருவிழாவுக்கு போனோம் ...
இப்படி இதை
ஒரு கவுரவமாக ,
பேஷனாக
நினைத்து வரும் மக்கள் தான் இங்கு அதிகம் .
அப்படி ஆகி விட்டார்கள் .
ஏதோ
' புத்தகத்திருவிழா'வுக்கு போய் வந்துவிட்டால்
அத்தனை அறிவையும்
இவர்கள் வாங்கி வந்துவிட்டவர்கள் போல்
ஒரு நிலையில் ,பெருமிதத்தில் .
சரி அப்படி என்னதான் இவர்கள்
கடந்த 4 ஆண்டுகளில் வாங்கியுள்ளனர்
எனக்கேட்டால் சிரிப்புதான் வரும் .
சரி ,அப்படி வாங்கியதையாவது
படித்தீர்களா என்றால் இல்லை என்ற
பதிலே பெரும்பாலும் .

இப்படிப்பட்டவர்களால் தான்
தமிழ் புத்தகங்களைவிட
ஆங்கிலப்புத்தகங்கள்
அதிகம் விற்பனையாகின்றதாம் .
அதனால் தான்
தமிழ் புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களைவிட
ஆங்கிலப்புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களுக்கு
இரண்டுமடங்கு வாடகையாம் .


புத்தகத்திருவிழாவில் விற்ற
புத்தகங்களை கணக்கெடுத்துப்பார்த்தால்
ஜோதிட சம்மந்தமான
புத்தகங்களும் ,
ஆன்மிக சம்மந்தமான புத்தகங்களும் தான்
முதலிடத்திலே
ஆண்டு தோறும் .
அதற்கு அடுத்து
அழகு சம்மந்தப்பட்ட
புத்தகங்களும் ,
சமையல் சம்மந்தமான
புத்தகங்களும் ,
அதற்கு அடுத்து வருவது
மருத்துவம் ,...

தனிநபர்களின் புத்தகத்தைப் பொறுத்தவரை
தபூ சங்கர் கவிதைகள் ,
தபூ சங்கர் கவிதைகள் ,
தபூ சங்கர் கவிதைகள் ,.....
அடுத்து
காந்தியின்
சத்திய சோதனை ,
அடுத்து
அப்துல் கலாமின் புத்தகங்கள் ...
இவைகள் தான்
டாப் லீஸ்ட் .

இவைகளில் எதுவும்
குழந்தைகளுக்கானது அன்று .

இதிலிருந்து
குழந்தைகளுடன் வரும்
பெற்றேர்களும் ,ஆசிரியர்களும் ,மற்றவர்களும்
குழந்தைகளை மிகப்பெரிய அவஸ்தைக்கு
உட்படுத்துவதுடன் ,அவர்களுக்காக
எதுவும் செய்வதுமில்லை
என்பது தெளிவாகிறது .


அதனால்
குழந்தைகளுக்காக
குழந்தைகளால்
முற்றிலும்
குழந்தைகளை மட்டுமே வைத்து
'குழந்தைகள் புத்தகக்கண்காட்சி'யை
நடத்தினால் மட்டுமே
அவர்களுக்காணதை
அவர்களே அவர்களின் ஒத்த வயதினரிடம்
சகஜமாகப்பேசி தேர்ந்தெடுப்பர் .
அவர்களின் அறிவும் ,ஆற்றலும்
அப்பொழுது தான் வெளிப்படும்.
இதுதான்
குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக
அமையும் ...

உலக
எதிர்காலமும்
மிகச்சிறந்ததாக அமையும் .

குழந்தைகளுக்கு எதையும் கொண்டு சேர்க்காமல்
எதைச்செய்தும் பயணில்லை ....


அது வரை
அறிவை புகட்டுகின்றேன் என்ற கோதாவில்,
இப்படிப்பட்ட சமுதாயத்தில்,
குழந்தைகளின் பாடு
அவஸ்தை தான் .
எதிர்கால சமுதாயத்தின் பாடும்
திண்டாட்டம் தான் .

.

.

.


Tuesday, July 21, 2009

பிரபல பதிவர் எனும் போதை .

மதிப்பிற்குரிய கும்மாச்சி அவர்களுக்கு,
இதை நான் தங்களுக்கு பின்னூட்டமாக கூற
நினைத்தேன் .ஆனால் , பின்னூட்டமாக கூறும் நல்ல விசயங்கள் கூட பல தடவைகள் வெறும்
மொக்கைகளாக ஆக்கிவிடுகின்றனர் என்பதோடு சொல்ல வந்த விசயத்தையே
திசை திருப்பியும் விடுகின்றனர் மொக்கையர்கள் என்பதால் தனிப்பதிவாகவவே
இதனை இட்டு தங்களின் பார்வைக்கும் வைக்கின்றேன் .

முதலாவதாக ,பதிவுலகில் பதிவிடுபவர்கள் பெரும்பாலும்
கணினி துறைசார்ந்து
இருப்பவர்கள் ,பிறகு சற்று பத்திரிக்கைத்துறை
சார்ந்து ,மற்றவர்கள் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் .
கணினி துறை மற்றும் அது சார்ந்து பணியில் இருப்பவர்களுக்கு
பணிப்பளு மற்றும் இதர
மன ,பண அழுத்தங்கள் காரணமாக ஏதாவது ஒரு புற வடிகால் தேவையாக உள்ளது .
புற வடிகாலுக்கு
பலர் வேறு மார்க்கம் தேடி தீர்த்துக்கொள்ளும் நிலையில் , அதற்குப்பயந்த
ஆனால் , நல்ல சிந்தனையுள்ளவர்கள் முதலில் தன் ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களை பதிவுலகில்
மொக்கைகள் முலம் அடையாளம் காண்கின்றனர் .
ஒவ்வொருவரும்
தனது கடினங்களை ,
தெரிந்ததை ,கண்டதை துறை பணி தவிர்த்து, தன்னை அமிழ்த்திய விசயங்களில் ஏற்பட்ட மன ,பண
அழுத்தத்திலிருந்து அதை வேறுவடிவில் வெளிப்படுத்தி விடுகின்றனர் தங்களுக்குத்தெரியாமலே .
பின் மெல்லமெல்ல அது சமுகத்தின் மீது பயணிப்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்து .

கொடும் பசியுடன் இருப்பவனுக்கு உணவைத்தவிர வேறு எதைக்கொடுத்தாலும்
என்ன ஆகும் .இப்படி நினையில் தான் இருககு பதிவுலகம் .
அப்படியிருக்க ,நீங்கள் நல்ல பதிவை போட்டா யார் ஓட்டுப்போடுவா .
இருந்தாலும் ,சில நல்ல பதிவர்களும் உளர் .அவர்கள் தான் நீங்கள் கூறும் நல்ல பதிவுக்கு
ஆதரவாக அமைகின்றனர் .
ஆனால் ,மற்ற சிலர் மொக்கைப்பதிவிலே லயித்து தங்களின் மன அழுத்தத்தை
ஆற்றிக்கொள்பவர்கள் .அவர்களுக்கு அது போதை .
அவர்களுக்கு
அது பிடித்துவிட்டது .அங்கு அவர்கள் பிரபலமாகி விட்டார் .மேலும் ,புகழ் என்னும்
போதையும் சேர்ந்துகொள்ள அவர்கள் அதற்கு நிரந்தர அடிமையாகி தனக்கு ஆதரவாக உள்ள ஒருவர்
எதை எழுதினாலும் ஓட்டும் ,பின்னூட்டமும்
போட்டு தங்களை அந்த நிரந்தர போதையிலேயோ வைத்துக்கொள்வர் .
நீங்கள் அன்னாரின் போதைக்கு சரியான டோஸ் ,அதாவது அவரிகளின் பதிவிற்கு ஒன்று ஓட்டு
அல்லது பின்னூட்டம் அல்லது இவை இரண்டும் கொடுக்கவில்லையென்றாலும் , அல்லது நல்ல பதிவுகளை
நீங்கள் போட்டு அவர்களுக்கு சலாம் போடாவிட்டாலும் ,அவர்கள் உங்களை ஓரம் கட்ட தங்களால்
முடிந்த டெக்னிக்குகளை கையாள்வார்- ப்ளாக் மாயம் மற்றும் COUNTING ERROR போன்ற
கிரிமினல் வேலைகளை மோற்கொள்வார்கள் . மற்றும் தங்களின் சகாக்களின் உதவியுடன் சதிகளும்
இங்கு சகஜம் .மேலும் வன்முறையைத்துண்டுகிறது ,அடுத்தவர் மனத்தை புண்படுத்துகிறது என
ஏதாவது கூறி உங்கள் ப்ளாக்கை தடைவிதிக்கவேண்டும் என கோசமும் போடுவர் .
அதற்கு கோஷ்டியும் சேர்ப்பர் .
ஆனால் ,அவர்களின் பின்னூட்டங்களை நீங்கள் பார்த்தீர்களெனில் அவர்களின் அசிங்கமான மனேநிலை
தெரியும் .
இப்படிப்பட்டவர்களினால்தான் நல்ல பதிவுகள் மறைக்கப்படுகிறது .
இது ஒருவகையான மன நோய் .
நல்ல புத்தகங்களை ,பதிவுகளை அவர்கள் படித்து தெளிவதைத்தவிர வேறு வழியில்லை .
இல்லையெனில் காலப்போக்கில் பதிவுலகம் அவர்களை வடிகட்டிவிடும் .இவர்களின் செயலுக்காக
பதிவுலகம் பின்னாளில் வருத்தப்படும் .

இந்தப்பதிவுக்கு அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினின்று தாங்கள்
அத்தகையவர்களை எளிதாக கண்டுகொள்ளலாம் .

நல்ல பதிவுகள் நல்லவர்களிடம்
சென்றடையாமல் இருப்பதில்லை.
யாராலும்
உண்மையை
மறைக்கவோ ,நிராகரிக்கவோ இயலாது .

Blog Widget by LinkWithin