Wednesday, August 5, 2009

ஈரோடு புத்தகத்திருவிழாவும், குழந்தைகள் புத்தகக்கண்காட்சியும் .

ஒரு அறிஞர்
சிஷ்யர்களுடன் மார்கெட்டுக்கு போனாராம் .
அங்கு இருக்கும் அனைத்துப்பொருள்களையும்
விசாரித்து ஆழ்ந்து பார்த்து விலையும்
கேட்டு தெரிந்துகொண்டு
பின் எதுவும் வாங்கமல் திரும்பினாராம் .
ஒன்றும் வாங்காமல் அது குறித்து
ஏன் இத்தனை விசாரணைகள் என
வினவியதற்கு தேவையில்லாதவைகள்
எத்தனை உண்டு என
தெரிந்துகொள்ளவேண்டி என்றாராம் .
அந்த அறிஞர் கதைதான்
'புத்தகத்திருவிழா'விற்குச் செல்லும்
எனது கதையும் .
தேவையில்லாதது
எவ்வளவு இருக்கின்றது என்பதைக்காணவும்.

முன்பொல்லாம் ஈரோட்டில் மாதம்
ஒரு இலக்கியச்சந்திப்புக்கள் நடக்கும் .
இதே வ.உ.சி .பூங்காவில்
வாராந்திரக்கூட்டமும் நடக்கும் .
கடந்த 5,6 வருசம எதுவும் முன்போல்
நடப்பதில்லை .
அப்படியே நடந்தாலும்
எண்ணி 6,7 நபர்கள் ,அதிலும் சிலர் மட்டும்
கட்டாயம் ஆஜராகி இருப்பர்
எல்லா வேலையையும் விட்டுவிட்டு.
20,25 பேர்கள் வந்துவிட்டால்
மிகவும் மகிழ்ந்து போவோம் .
நண்பர்களைக்காண வாய்ப்புகள்
இல்லாமல் இருந்தது .
' புத்தகத்திருவிழா'
நண்பர்களைக்காண ஒரு இடமாக
ஆகிவிட்டதாலும்
சென்று வருவேன் .

கடந்த 03.08.2009 அன்று
' புத்தகத்திருவிழா' செல்லலாம்னு
கிளம்பினேன் .
குட்டிப்பாப்பா L.K.G
படிக்கிறாள் .
நானும் வரேனு சொல்ல
கூட்டிக்கிட்டு போனோன் .
வண்டியில் செல்லும்பொழுதே
என்ன பாப்பா வாங்கப்போறனு கேட்டேன்
யானை புத்தகம்னு சென்னாள் .
சந்தோசம
யானை ...யானைனு பாடிக்கிட்டு வந்தாள் .
வண்டிய பாஸ் போட்டுட்டு கிளம்பும்போது
என் கையை இருக்க பிடித்துத்தாள் ,
அவளைப்பார்த்தேன் ,
கூட்டத்தைப்பார்த்து ஏதே
அச்சப்படுவதை உணர்ந்தேன் .
கூட்ட இடிபாடுகளில்
நாமே திக்குமுக்காட
குழந்தை அவஸ்தைப்படுவதை உணர்ந்தேன் .
என்னைப்பார்த்து
பொம்மை வேண்டும் என்றாள் .
இங்கிருப்பதை அவள் விரும்பவில்லை
என்றஅவளின் நிலையை உணர்ந்து
வெளியேவந்துவிட்டேன் .
பொம்மை எங்கு வாங்க என்றேன் .
கண்மணியில என்றாள் .
யானை பொம்மை வாங்கினால்
மிகவும் மகிழ்ச்சியாக .
யானை புத்தகம் என்றேன்
வேண்டாம் என்றாள் விரக்தியாக .

புத்தகத்திருவிழாவிற்கு சென்றீர்களா ,
எத்தனை நாள் சென்றீர்கள் ,
எத்தனை புத்தகம் வாங்குனீங்க ,
அவ்வளவு தானா ...
நான் நேத்து போனேன் பேமிலியோட,
1000 க்கு புத்தம் வாங்கினேன் ...
நேரமே இல்லை மெட்ராசில பாத்துக்கிறேன் ,
மிஸ் நேத்து பாப்பாவேட
புத்தகத்திருவிழாவுக்கு போனோம் ...
இப்படி இதை
ஒரு கவுரவமாக ,
பேஷனாக
நினைத்து வரும் மக்கள் தான் இங்கு அதிகம் .
அப்படி ஆகி விட்டார்கள் .
ஏதோ
' புத்தகத்திருவிழா'வுக்கு போய் வந்துவிட்டால்
அத்தனை அறிவையும்
இவர்கள் வாங்கி வந்துவிட்டவர்கள் போல்
ஒரு நிலையில் ,பெருமிதத்தில் .
சரி அப்படி என்னதான் இவர்கள்
கடந்த 4 ஆண்டுகளில் வாங்கியுள்ளனர்
எனக்கேட்டால் சிரிப்புதான் வரும் .
சரி ,அப்படி வாங்கியதையாவது
படித்தீர்களா என்றால் இல்லை என்ற
பதிலே பெரும்பாலும் .

இப்படிப்பட்டவர்களால் தான்
தமிழ் புத்தகங்களைவிட
ஆங்கிலப்புத்தகங்கள்
அதிகம் விற்பனையாகின்றதாம் .
அதனால் தான்
தமிழ் புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களைவிட
ஆங்கிலப்புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களுக்கு
இரண்டுமடங்கு வாடகையாம் .


புத்தகத்திருவிழாவில் விற்ற
புத்தகங்களை கணக்கெடுத்துப்பார்த்தால்
ஜோதிட சம்மந்தமான
புத்தகங்களும் ,
ஆன்மிக சம்மந்தமான புத்தகங்களும் தான்
முதலிடத்திலே
ஆண்டு தோறும் .
அதற்கு அடுத்து
அழகு சம்மந்தப்பட்ட
புத்தகங்களும் ,
சமையல் சம்மந்தமான
புத்தகங்களும் ,
அதற்கு அடுத்து வருவது
மருத்துவம் ,...

தனிநபர்களின் புத்தகத்தைப் பொறுத்தவரை
தபூ சங்கர் கவிதைகள் ,
தபூ சங்கர் கவிதைகள் ,
தபூ சங்கர் கவிதைகள் ,.....
அடுத்து
காந்தியின்
சத்திய சோதனை ,
அடுத்து
அப்துல் கலாமின் புத்தகங்கள் ...
இவைகள் தான்
டாப் லீஸ்ட் .

இவைகளில் எதுவும்
குழந்தைகளுக்கானது அன்று .

இதிலிருந்து
குழந்தைகளுடன் வரும்
பெற்றேர்களும் ,ஆசிரியர்களும் ,மற்றவர்களும்
குழந்தைகளை மிகப்பெரிய அவஸ்தைக்கு
உட்படுத்துவதுடன் ,அவர்களுக்காக
எதுவும் செய்வதுமில்லை
என்பது தெளிவாகிறது .


அதனால்
குழந்தைகளுக்காக
குழந்தைகளால்
முற்றிலும்
குழந்தைகளை மட்டுமே வைத்து
'குழந்தைகள் புத்தகக்கண்காட்சி'யை
நடத்தினால் மட்டுமே
அவர்களுக்காணதை
அவர்களே அவர்களின் ஒத்த வயதினரிடம்
சகஜமாகப்பேசி தேர்ந்தெடுப்பர் .
அவர்களின் அறிவும் ,ஆற்றலும்
அப்பொழுது தான் வெளிப்படும்.
இதுதான்
குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக
அமையும் ...

உலக
எதிர்காலமும்
மிகச்சிறந்ததாக அமையும் .

குழந்தைகளுக்கு எதையும் கொண்டு சேர்க்காமல்
எதைச்செய்தும் பயணில்லை ....


அது வரை
அறிவை புகட்டுகின்றேன் என்ற கோதாவில்,
இப்படிப்பட்ட சமுதாயத்தில்,
குழந்தைகளின் பாடு
அவஸ்தை தான் .
எதிர்கால சமுதாயத்தின் பாடும்
திண்டாட்டம் தான் .

.

.

.


15 comments:

வால்பையன் said...

நான் ஞாயிற்றுகிழமை போணேன்!

விடுத‌லைவீரா said...

சரியாக சொன்னீங்க தோழரே...
இனியாவது செய்வார்களா
காத்திருந்து பார்ப்போம்..

என் பக்கம் said...

//புத்தகத்திருவிழாவில் விற்ற
புத்தகங்களை கணக்கெடுத்துப்பார்த்தால்
ஜோதிட சம்மந்தமான
புத்தகங்களும் ,
ஆன்மிக சம்மந்தமான புத்தகங்களும் தான்
முதலிடத்திலே
ஆண்டு தோறும் .
அதற்கு அடுத்து
அழகு சம்மந்தப்பட்ட
புத்தகங்களும் ,
சமையல் சம்மந்தமான
புத்தகங்களும் ,
அதற்கு அடுத்து வருவது
மருத்துவம் ,..//

:)))))

kannan.aks said...

real opinion.............

முனைவர்.இரா.குணசீலன் said...

புத்தகத்திருவிழா'வுக்கு போய் வந்துவிட்டால்
அத்தனை அறிவையும்
இவர்கள் வாங்கி வந்துவிட்டவர்கள் போல்
ஒரு நிலையில் ,பெருமிதத்தில் .
சரி அப்படி என்னதான் இவர்கள்
கடந்த 4 ஆண்டுகளில் வாங்கியுள்ளனர்
எனக்கேட்டால் சிரிப்புதான் வரும் .//

உண்மைதான் சிரிப்புதான் வரும்

முனைவர்.இரா.குணசீலன் said...

தங்கள் பதிவுக்கு இன்றுதான் வருகை தருகிறேன்...
நன்றாகவுள்ளது.......

notknown said...

ஒரு மாறுபட்ட கோணத்தில் விமர்சனம். பாராட்டுக்கள்.

வா. நேரு

காந்தி காங்கிரஸ் said...

நான் நண்பர்கள் அழைத்தால் செல்வேன் .
நன்றி வால்பையன் .

காந்தி காங்கிரஸ் said...

செய்யவேண்டும் விடுத‌லைவீரா
நன்றி

காந்தி காங்கிரஸ் said...

இதற்கே இப்படியா
நன்றி என் பக்கம்

காந்தி காங்கிரஸ் said...

மிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன்

காந்தி காங்கிரஸ் said...

மிக்க நன்றி வா. நேரு

காந்தி காங்கிரஸ் said...

நன்றி kannan.aks

ரா said...

நல்ல விமர்சனம்
தொடரட்டும் .

Anonymous said...

superappu..
jaypee

Post a Comment

Blog Widget by LinkWithin