Thursday, August 13, 2009

ஈரோட்டிலிருந்து அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ஒரு கடிதம் .

எனது மதிப்பிற்கும் ,
மரியாதைக்கும் உரிய
அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு ,
ஈரோட்டிலிருத்து
காந்தி வணக்கத்துடன் எழுதுவது .

அய்யா எனக்கு
புத்தர் ,காந்தி ,மார்க்சு,பெரியார்ன
ரொம்ப உசிருங்க .
உண்மையை உலகிற்கு உணர்த்த
இந்த ப்ளாக்கை ஆரம்பிச்சேனுங்க
இதற்கு
எனது ஆசான்களில் ஒருவரான மாமனிதர் மோகன்தாசின் பெயரில்
எனக்கு வைத்துக்கொண்ட புனைப்பெயர் தாங்க இது
காந்தி .

அய்யா நேற்று (11.08.09 )எங்க ஊருக்கு வந்திருந்தீங்க .
ரொம்ப மகிழ்ச்சிங்க .


அய்யா எங்க ஊருக்கு நீங்க வருவது
இது தானுங்க முதல் தடவைனு நினைக்கின்றேன் .

அதனால எங்க ஊரைப்பத்தி உங்ககிட்ட
ஒரு விசயம் உங்ககிட்ட முதலில் கூற ஆசைப்படுரேங்க .

நாங்கள்ளாம்
( நாமெல்லாம் என்று தானுங்க சொல்லனும் ,
நீங்க உயர்வான இடத்தில இருக்கரதால நாங்கனே
செல்றேன் ,
கோவித்துக்கொள்ளாதீங்க ).
நாங்கள்ளாம்
ரொம்ப பாமரர்களுங்க .
ஆமாங்க ,
எங்காளுங்க உயர்ந்த இடத்திலிருந்து
எதைச்சென்னாலும் உடனே கற்பூரம் மாதிரி கப்புனு புடுச்சிக்குவோம்.
அப்படித்தானுங்க
எங்கமேல மலரிதழ்களை தூவுவதாக
கூறி காலம் காலமா
சாதி ,மதம் ,
மூடப்பழக்க வழக்கங்கள் ,அடிமைத்தனம் இப்படி எண்ணிலடங்கா
குப்பைகளை தூவி
முடியிருந்தனர் உயர்ந்தோர் .
அப்பத்தானுங்க
கலகக்காரர் ஒருத்தர் பிறந்தாருங்க .
அதுவும் பாருங்க 98 வயது வரை
ஒரு கையில் மூத்திரச்சட்டியைத் தூக்கிக்கிட்டு
எங்களுக்கு எங்களின் நிலையை
விளக்கியதோடு ,
எங்களின் அறியாமையை அகற்றவும் ,
அடிமைத்தனம் நீக்கவும் ,
அயராது பாடுபட்டு .
மனிதனை மனிதனாக நினைக்கும்
பக்குவத்தை
விதைத்து ,
குப்பைகளிலிருந்து எங்களை
மீட்டாருங்க .
அவரின் பேச்சால்,எழுத்தால் ,வாழ்வால்.
அவர்தானுங்க பெரியாருங்க .
அவர் பிறந்த ஊரு தாங்க இது .
இங்கு அவர் பிறந்த கட்டில் கூட
இன்னும் இருக்குங்க .
அவர்பயன்படுத்திய பொருட்கள் அத்தனையும் இருக்குங்க இங்கிருக்கும்
அவரின் நினைவகத்தில் .
ஆனால் அய்யா ,இந்த மூடப்பழக்கவழக்கத்தை
அதானுங்க சாமி கும்பிடுரது போன்ற
பழக்கத்தை ஓழிக்கரத்துக்கு
அவர் படாத பாடு பட்டிருக்காருங்க .
இருந்தாலும் இன்னும் பலபேர் அப்படியே
தாங்க அறியாமையிலே இருக்காங்க .


உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா
இவரைப்பற்றி.
ஏன் கோட்கிறேன் என்றால்
மொதமொத எங்க ஊருக்கு வந்திருக்கீங்க
இவரைபற்றி பேசுவிங்கனு
நினைத்தேன் .
நீங்க பேசவே இல்லையே
அதனால் தான் .
அவ்வளவு தாங்க .

அப்புறம் அய்யா ,
தாங்கள் இங்கு கூடியிருந்தவர்களிடம் உறுதிமொழி ஒன்று எடுத்துக்கச்சொன்னீர்கள் .
''என்னுடைய வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் 20 நல்ல
புத்தகங்கள் கொண்டு ஒரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன் '' என்று
அது தாங்க
இந்த கடிதத்திற்கு காரணமுங்க .

அய்யா,
உங்களை
வழிகாட்டியாகவும் ,
ஆசானாகவும் ,
வாழ்வில் முன்னேடியாகவும் ,
முதன்மையானவராகவும்
எண்ணற்ற குழந்தைகளும் ,
இளைஞர்களும் எடுத்துக்கொண்டு
நீங்கள் கூறும் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றார்கள் .
நிறைய படித்த பண்பாளர்கள் பலரும் இதில் அடக்கங்க.
அவர்கள் எல்லாம் நேற்றே வீட்டு நூலகம் ஆரம்பித்திருப்பர் .

இதில் சிக்கல் என்னவென்றால் வீட்டு நூலகம் தோறும் அருகில் கட்டயம் பூஜை அறை அல்லது
பிரார்த்தனை அறை இருக்கவேண்டும் என்பது தாங்க .

நடுத்தர பாமர மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் பூஜை அறை அல்லது பிரார்த்தனை
அறை என்பது வீட்டுல இருக்க ஏதே ஒரு அலமாறியில மேல் ரோக்கு தாங்க .
அதுவும் 10க்கு 10 ரூமில.
நீங்க சென்னதால மேல் ரோக்கு ஒரமா வீட்டு நூலகத்தை ஆரம்பிக உத்தேசங்க .
வீட்டுக்கு வரவங்க பேரவங்ககிட்ட புத்தக திருவிழா போயிருந்தேன் அப்துல்கலாம் அய்யா
அவர்கள் வந்திருந்தார் புள்ளக முன்னேற்றத்திற்கு வீட்டு நூலகத்தை ஆரம்பிக சென்னார்
ஆரம்பிச்சிட்டேன் அவரு புத்தகமும் இருக்கு பார் நீங்களும் ஆரம்பிக்க வேண்டியது தானே
என்ற விமரிசனத்துடன் .
அதனால் பலரிடமும் இந்த பழக்கம் தொடர .

மார்க்சு ,பெரியார் புத்தகங்கள் சாமி படத்துக்கு பக்கத்துல வச்சா ஒன்னு சாமி
கோவித்துக்கொள்ளும் அல்லது வரவங்க பேரவங்ககிட்ட ஏயா அறிவிருக்கா ,சாமி கிட்டப்போய்
மார்க்சு , பெரியார் என விமரிசனத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்பதால் பகுத்தறிவு
மற்றும் பொது உடைமைச்சித்தாந்தங்கள் கூறும் புத்தகங்கள் வாங்கவதே முதலில் கட் .
சாமியை மகிழ்விக்க தேவாரம் ,திருவாசகம் ,
பகவத் கீதை ,பைபில் ,குரான்
இப்படி சாமி சம்பந்தமான புத்தகங்கள் ஆஜர் .
அவரவர் கோட்பாட்டிற்கு ஏற்ப .
பர்சேசும் அப்படியே .
தினமும் , ஒரு மணி நேரம் நூலகம, பஜனை மடமாக ,மல்டி பர்பஸ்
சாமிக்கு சாமி குப்பிட்டமாதிரியும் ஆச்சு நூலகத்துல படிச்ச மாதிரியும் ஆச்சு .
அவசர உலகந்தானுங்க எங்க டயம் கிடைக்குதுங்க .

இப்படித்தானுங்க
அய்யா நீங்கள் வாங்கிய உறுதிமொழிப்படியான நூலகங்கள் அமையப்போகின்றன,
வீட்டில் பூஜை அறைக்கு அருகில் அல்லது பிரார்த்தனை அறைக்கு அருகில் அமைத்தால் .

அய்யா ,
உங்களின் நோக்கம் மிகவும் உயர்வானது தான் .
ஆனால் ,
அதனை அடைய தாங்கள் கூறிய பாதை தான் மிகமிகத் தவறானதாக உள்ளதாக உணர்ரேங்க .

உலகில்
எந்த ஒரு சிறந்த விசயமாகட்டும் ,
போராட்டமாகட்டும்
உயர்ந்த லட்சியத்தாற்காகத்தான் ஆரம்பிக்கப்படுகிறது .
ஆனால்,
அதனை அவை அடைவதற்கு மேற்கொள்ளும் பாதைத்தவற்றினால் படுமோசமாக
மனித குலத்தை கொண்டுசென்றுவிடுகிறது
என்பது எனது கருத்துங்க .
இதை நாம் உலகினில் பார்த்து தானே வருகின்றேம் .

அய்யா ,
விண்வெளி ராக்கெட்டு விஞ்ஞானியான உங்களுக்கு மனிதனை மனிதனாக்கும் அந்த
மனிதர்களின் கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருக்கலாம் . ஆனால் ,
இப்பொழுது தான் கண் முழித்துவரும் எங்க பாமர சமுதாயத்தை மீண்டும் படுபாதகமதகுழிக்குள்
தள்ளும் இது போன்ற உறுதிமொழிகளை இனி வாங்க வேண்டாமுங்க .
நாங்கொல்லாம் இரணத்துடன் நொந்து நூலாகி ஏதே மேல இப்பத்தான் வந்துக்கிட்டு இருக்கோமுங்க .
உங்களைப்போன்றவர்களே இப்படிப்செய்தால் மனித குல மேன்மைக்காக பாடு பட்ட
மார்க்சு , பெரியார் போன்றவர்களின் பாடெல்லாம் என்னாவது அய்யா.

தயவுசெய்து
நான் செல்லறதுல தப்பிருந்தா தப்புனு செல்லுங்க அய்யா .
திருத்திக்கிறேன் .

தப்பு என தெரிந்தும் திருத்திக்கொள்ளாதவன் உறைந்து விடுவான் ,பின் உடைந்து விடுவான்
என்பது எனது கருத்துங்க .

மற்றபடி ஒன்றுமில்லைங்க அவ்வளவு தாங்க அய்யா .

என
அன்புடன்
காந்தி .


.


.

.


.

Monday, August 10, 2009

பெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே .

.


நேற்று ஈரோட்டில்
''பெரியாரின் எழுத்துக்கள் பற்றிய சர்ச்சை குறித்த''
பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்தேன் .
காலில் விலங்கிடப்பட்ட
பெரியாரின் கோலத்தை , பேச்சாளர்களின் இருக்கைகளின் பிண்ணனியில் ஒலியூட்டப்பட்டு
இருப்பது கண்டு ஆடிப்போனேன். அப்பொழுது அன்பர் ஒருவர் எனது கையில் சிற்றறிக்கை
ஒன்றை கொடுத்தார் .
அதில் ''குமுதம் '' வெளியிட்டிருந்த
கேலிச்சித்திரத்தை கண்டேன் .
மண்டை சுறப்பை ஏதோ அரித்தது .


ஒரு பகுத்தறிவாளரை ,
மனிதனை மனிதனாக மாற்ற நினைத்த மாந்தரை ,
சுதந்திரக்காற்றை ,
அறியாமை விலங்கொடிக்க பாடுட்டவரை -''கால் விலங்கி்ட்டு'' . வெம்பினேன்.
என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று இது .
அது கண்டு பெரியாரின் உண்மைத்தொண்டர்களாகிய நாம்
பெரியாருக்கு விலங்கிட நீ யார் ? உனக்கு என்ன தைரியம் ,அந்த தைரியத்தைக் கொடுத்து
யார் ?
எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் ,அதை பயன்படுத்தி பகுத்தறிவுப்பகல்வனை விலங்கிட்டு
அவமானப்படுத்துகிறாய் என குமுறி இருக்கவேண்டாமா ?.
எது எப்படியிருந்தாலும் பெரியாரை விலங்கிட நாம் அனுமதிக்கலாமா ?.
இது பகுத்தறிவா ?,
நாகரிகமா ?.
சரிதானா ?.
முறைதானா ? .


அது தவிர்த்து ,
மேடைக்கு மேடை
''காலில் விலங்கிடப்பட்ட பெரியாரின் கோலத்தை ,பேச்சாளர்களின் இருக்கைகளின்
பிண்ணனியில் ஒலியூட்டி ,சிற்றறிக்கையிலும் கொடுப்பது ''
மானமுள்ள
தமிழர்களாக ,பகுத்தறிவாளர்களாக நம்மை ஆக்கிய
பெரியாருக்கு
நாம் கொடுக்கும் மரியாதையாக எனக்குத் தெரியவில்லை .


உண்மையில்
நாம் பகுத்தறிவாளர்கள் தானா ?.
என்ற கேள்வியே என்னுள் எழுகிறது .

மாபெரும் அவமானம் பெரியாருக்கு - என அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன்.


இந்தப்பதிவின் முலம்
பெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே.

இப்படிப்பட்ட தவறினை இனி் செய்யவேண்டாம் என எனதருமைச் சகோதரர்களை கேட்டுக்கொள்கின்றேன் .

''குமுதத்தை ''
இதன் முலம் மிகவும் வண்மையாகக் கண்டிக்கின்றேன் .


.

.

.


Wednesday, August 5, 2009

ஈரோடு புத்தகத்திருவிழாவும், குழந்தைகள் புத்தகக்கண்காட்சியும் .

ஒரு அறிஞர்
சிஷ்யர்களுடன் மார்கெட்டுக்கு போனாராம் .
அங்கு இருக்கும் அனைத்துப்பொருள்களையும்
விசாரித்து ஆழ்ந்து பார்த்து விலையும்
கேட்டு தெரிந்துகொண்டு
பின் எதுவும் வாங்கமல் திரும்பினாராம் .
ஒன்றும் வாங்காமல் அது குறித்து
ஏன் இத்தனை விசாரணைகள் என
வினவியதற்கு தேவையில்லாதவைகள்
எத்தனை உண்டு என
தெரிந்துகொள்ளவேண்டி என்றாராம் .
அந்த அறிஞர் கதைதான்
'புத்தகத்திருவிழா'விற்குச் செல்லும்
எனது கதையும் .
தேவையில்லாதது
எவ்வளவு இருக்கின்றது என்பதைக்காணவும்.

முன்பொல்லாம் ஈரோட்டில் மாதம்
ஒரு இலக்கியச்சந்திப்புக்கள் நடக்கும் .
இதே வ.உ.சி .பூங்காவில்
வாராந்திரக்கூட்டமும் நடக்கும் .
கடந்த 5,6 வருசம எதுவும் முன்போல்
நடப்பதில்லை .
அப்படியே நடந்தாலும்
எண்ணி 6,7 நபர்கள் ,அதிலும் சிலர் மட்டும்
கட்டாயம் ஆஜராகி இருப்பர்
எல்லா வேலையையும் விட்டுவிட்டு.
20,25 பேர்கள் வந்துவிட்டால்
மிகவும் மகிழ்ந்து போவோம் .
நண்பர்களைக்காண வாய்ப்புகள்
இல்லாமல் இருந்தது .
' புத்தகத்திருவிழா'
நண்பர்களைக்காண ஒரு இடமாக
ஆகிவிட்டதாலும்
சென்று வருவேன் .

கடந்த 03.08.2009 அன்று
' புத்தகத்திருவிழா' செல்லலாம்னு
கிளம்பினேன் .
குட்டிப்பாப்பா L.K.G
படிக்கிறாள் .
நானும் வரேனு சொல்ல
கூட்டிக்கிட்டு போனோன் .
வண்டியில் செல்லும்பொழுதே
என்ன பாப்பா வாங்கப்போறனு கேட்டேன்
யானை புத்தகம்னு சென்னாள் .
சந்தோசம
யானை ...யானைனு பாடிக்கிட்டு வந்தாள் .
வண்டிய பாஸ் போட்டுட்டு கிளம்பும்போது
என் கையை இருக்க பிடித்துத்தாள் ,
அவளைப்பார்த்தேன் ,
கூட்டத்தைப்பார்த்து ஏதே
அச்சப்படுவதை உணர்ந்தேன் .
கூட்ட இடிபாடுகளில்
நாமே திக்குமுக்காட
குழந்தை அவஸ்தைப்படுவதை உணர்ந்தேன் .
என்னைப்பார்த்து
பொம்மை வேண்டும் என்றாள் .
இங்கிருப்பதை அவள் விரும்பவில்லை
என்றஅவளின் நிலையை உணர்ந்து
வெளியேவந்துவிட்டேன் .
பொம்மை எங்கு வாங்க என்றேன் .
கண்மணியில என்றாள் .
யானை பொம்மை வாங்கினால்
மிகவும் மகிழ்ச்சியாக .
யானை புத்தகம் என்றேன்
வேண்டாம் என்றாள் விரக்தியாக .

புத்தகத்திருவிழாவிற்கு சென்றீர்களா ,
எத்தனை நாள் சென்றீர்கள் ,
எத்தனை புத்தகம் வாங்குனீங்க ,
அவ்வளவு தானா ...
நான் நேத்து போனேன் பேமிலியோட,
1000 க்கு புத்தம் வாங்கினேன் ...
நேரமே இல்லை மெட்ராசில பாத்துக்கிறேன் ,
மிஸ் நேத்து பாப்பாவேட
புத்தகத்திருவிழாவுக்கு போனோம் ...
இப்படி இதை
ஒரு கவுரவமாக ,
பேஷனாக
நினைத்து வரும் மக்கள் தான் இங்கு அதிகம் .
அப்படி ஆகி விட்டார்கள் .
ஏதோ
' புத்தகத்திருவிழா'வுக்கு போய் வந்துவிட்டால்
அத்தனை அறிவையும்
இவர்கள் வாங்கி வந்துவிட்டவர்கள் போல்
ஒரு நிலையில் ,பெருமிதத்தில் .
சரி அப்படி என்னதான் இவர்கள்
கடந்த 4 ஆண்டுகளில் வாங்கியுள்ளனர்
எனக்கேட்டால் சிரிப்புதான் வரும் .
சரி ,அப்படி வாங்கியதையாவது
படித்தீர்களா என்றால் இல்லை என்ற
பதிலே பெரும்பாலும் .

இப்படிப்பட்டவர்களால் தான்
தமிழ் புத்தகங்களைவிட
ஆங்கிலப்புத்தகங்கள்
அதிகம் விற்பனையாகின்றதாம் .
அதனால் தான்
தமிழ் புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களைவிட
ஆங்கிலப்புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களுக்கு
இரண்டுமடங்கு வாடகையாம் .


புத்தகத்திருவிழாவில் விற்ற
புத்தகங்களை கணக்கெடுத்துப்பார்த்தால்
ஜோதிட சம்மந்தமான
புத்தகங்களும் ,
ஆன்மிக சம்மந்தமான புத்தகங்களும் தான்
முதலிடத்திலே
ஆண்டு தோறும் .
அதற்கு அடுத்து
அழகு சம்மந்தப்பட்ட
புத்தகங்களும் ,
சமையல் சம்மந்தமான
புத்தகங்களும் ,
அதற்கு அடுத்து வருவது
மருத்துவம் ,...

தனிநபர்களின் புத்தகத்தைப் பொறுத்தவரை
தபூ சங்கர் கவிதைகள் ,
தபூ சங்கர் கவிதைகள் ,
தபூ சங்கர் கவிதைகள் ,.....
அடுத்து
காந்தியின்
சத்திய சோதனை ,
அடுத்து
அப்துல் கலாமின் புத்தகங்கள் ...
இவைகள் தான்
டாப் லீஸ்ட் .

இவைகளில் எதுவும்
குழந்தைகளுக்கானது அன்று .

இதிலிருந்து
குழந்தைகளுடன் வரும்
பெற்றேர்களும் ,ஆசிரியர்களும் ,மற்றவர்களும்
குழந்தைகளை மிகப்பெரிய அவஸ்தைக்கு
உட்படுத்துவதுடன் ,அவர்களுக்காக
எதுவும் செய்வதுமில்லை
என்பது தெளிவாகிறது .


அதனால்
குழந்தைகளுக்காக
குழந்தைகளால்
முற்றிலும்
குழந்தைகளை மட்டுமே வைத்து
'குழந்தைகள் புத்தகக்கண்காட்சி'யை
நடத்தினால் மட்டுமே
அவர்களுக்காணதை
அவர்களே அவர்களின் ஒத்த வயதினரிடம்
சகஜமாகப்பேசி தேர்ந்தெடுப்பர் .
அவர்களின் அறிவும் ,ஆற்றலும்
அப்பொழுது தான் வெளிப்படும்.
இதுதான்
குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக
அமையும் ...

உலக
எதிர்காலமும்
மிகச்சிறந்ததாக அமையும் .

குழந்தைகளுக்கு எதையும் கொண்டு சேர்க்காமல்
எதைச்செய்தும் பயணில்லை ....


அது வரை
அறிவை புகட்டுகின்றேன் என்ற கோதாவில்,
இப்படிப்பட்ட சமுதாயத்தில்,
குழந்தைகளின் பாடு
அவஸ்தை தான் .
எதிர்கால சமுதாயத்தின் பாடும்
திண்டாட்டம் தான் .

.

.

.


Blog Widget by LinkWithin