Saturday, October 10, 2009

சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் ...

"நூறு மருத்துவர்கள் மத்தியில்
இறந்து கொண்டிருக்கின்றேன்" -அலெக்சாண்டர் தி கிரேட்.

"கோடி மருத்துவர்கள் மத்தியில்
கூனி வலியுடன் வாழ்கின்றோம் "- காந்தி காங்கிரஸ் .

சென்ற செப்டம்பர் மாதம் 3-ம் தேதி மதியம்
கோர்ட்டில் வழக்கு விவாதத்திற்குஅமர்ந்திருந்த
பொழுது வலது காலில் தாங்க முடியாதபடி பயங்கர வலி உடனேடாக்டரைப்பார்த்தேன் .
அவர் இப்பொழுதுதான் ஆரம்பம்
காய்ச்சல் 100 இருக்கு
நல்ல ரெஸ்டு எடுங்க என்றவர்
PARACETAMOL மாத்திரை மட்டும்
2 நாளைக்கு 3 வேளை சாப்பிட எழுதிக்கொடுத்தார் .
எனக்கு ஒன்றும் புரியவில்லை .
வீட்டிற்கு வந்த பிறகு காய்ச்சல் 104 யை
தொட்டது .
அதே நிலை 2 நாட்கள் நீடித்தது .
கை,கால் மற்றும் உடம்பில் JOINT னு
எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம்
தாங்க முடியாதபடி பயங்கர வலி .
டாய்லட் போனால்
எழுத்திருக்கவே முடியாத நிலை
அவ்வளவு வலி .
மேலும் ,
நடந்தால்,
உடல் நிலத்தை நோக்கி கூன் விழுந்த மனிதர் போல்தான் நடை .
டாக்டரை தினமும் பார்த்தேன் .
2 நாளில் காய்ச்சல் போய்விட்டது .
ஆனால் ,
கை,கால் மற்றும் JOINT வலி
இன்னும் போகவில்லை .
நடப்பதற்கே மிகவும் கடினமாக உள்ளது .
எந்த வேலையையும் சரியாக செய்யமுடிவதில்லை .
சோர்வாகவே தினம் கழிகின்றது .

இது பற்றி எனது மருத்துவ நண்பர்களை
கேட்ட பொழுது தயங்கிய படி
சில திடுக்கிடும் உண்மைகள் சென்னார்கள் .

இந்த நோய்க்குப் பெயர் சிக்கன் குனியாவாம் .
1952-ல் ஆப்பிரிக்காவில் இருப்பது அறியப்பட்டது .
2005-ல் இருந்து இந்தியாவில் அறியப்படுகின்றதாம் .
வைரஸ்களால் ஏற்படும்
இந்த நோய்
மருந்து மாத்திரைகள் எடுக்காமலே
காய்ச்சல் போய்விடும் .
ஆனால் JOINT வலி
அவரவர் உடல் வாகிற்கு ஏற்ப இருக்குமாம் .
எனது நண்பர் சென்னார்
அவருக்கு 3 வருடங்களாக வலி உள்ளதாம் .

காய்ச்சல் வந்து உடனே போய்விடுவதாலும் ,
இந்த நோய் இருப்பதாக ஒத்துக்கொண்டால்
சர்வதேச சமுகத்தினின்று
ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தினாலும்
அரசு இந்நோயை கண்டுகொள்வதில்லையாம் .

இந்த நோய் வந்தால்
மனிதனால் இயங்கவே முடிவதில்லை .
மிகவும் கடினமாக இருக்கின்றது .
ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள்
ஏற்கனவே கடின வாழ்வு வாழ்ந்து கொண்டு வரும் நிலையில்
இந்த நோயுடன் எப்படி காலத்தை கடத்துகின்றனரோ .
அவர்கள் மனிதாபிமானமில்ல மனிதர்களிடம்
வதைபடுவதோடு மட்டுமல்லமல்
கிருமிகளாலும் வதைபடுவதை நீனைக்கும்
பொழுது ,
என்ன உலகமடா ? .

(Following are the countries from where Chikungunya infection is
reported (as of March 2008),
Benin,Burundi,Cambodia,Cameroon,Central African Republic,
Comoros,Congo,East Timor,Gunea,India,Indonesia,Italy,Kenya,Laos
,Madagascar,Malawi,Malaysia,Mauritius,Mayotte,Myanmar,Nigeria
,Pakistan,Philippines,Senegal,Seychelles,Singapore,South Africa
,Srilanka,Sudan,Taiwan,Tanzania,Thailand,Uganda ,Vietnam
Zimbabwe.)


அதே போல் தான் ,
எங்க ஊரிலும்
அன்னாடும் காய்ச்சிகள் அதிகம் பேருக்கு
இந்த நோய் பரவியுள்ளது .
உழைக்கவும் முடியாமல் ,
வருமானமும் இன்றி ,
கடின வலியுடன் நகர்ந்து
கொண்டிருக்கின்றனர்
கூனி குருகி
எங்களின் ஈரோடு பகுதியைச்சுற்றி மட்டும்
சுமார் 5 லட்சம் பேர் .
இந்தியா முழுவதும் ....!!! ????.
இதைப்பற்றி யாருக்கும் இதுவரை எந்த அக்கறையும் இல்லை .
அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை .
அரசும் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை .
அரசு இந்நோயை ஒத்துக்கொள்வதும் இல்லை
என்கின்றனர் விசயம் தெரிந்த மருத்துவர்கள் .

அரசு கண்டு கொண்டால் தான் ,
ஒத்துக்கொண்டால் தான்
இந்நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்க ஏதுவாகும் .
இதைத்தவிர்த்தால்
மனிதனின் ஆற்றல் எல்லாம்
சிக்கன் குனியா நோய்
ஏற்படுத்தும் கூனலுக்குல் தீர்ந்துவிடும் .

எனக்கென்னவோ
இன்றுள்ள அரசுகள்
'பெரும்பான்மை பேராசைக்காரர்கள் அமைப்பாக '
இருப்பதால்தான்
இத்தகைய நோய்கள் பற்றி கண்டு கொள்ளாமல்
அலட்சியப்படுத்துகின்றது எனத்தேன்றுகிறது .

'மக்களின் மீது அதிக அக்கறை கொண்ட அரசே
உயர்ந்த லட்சியம் கொண்டகுடிமக்களைப்பெற்றிருக்கும்'.

இன்று நாமுள்ள நிலையில்
சந்திரனுக்கு குடியேறுவதற்கும் ,
அணு ,ஆயுதம் தயாரிப்பதற்கும்
செலவிடும் தொகைகள்
யாருக்குப்பயன் அளிக்கப்போகிறது
எனத்தெரியவில்லை.
ஆனால் , அவைகள்
இந்த நோய்வாய்ப்பட்டவர்களின்
இரத்தத்திலிருந்தும் உரிஞ்சப்பட்டவைகள்
என்பது தான் நிதர்சனமான உண்மை .

நமது இந்தியாவைப் பொறுத்தவரை
மருத்துவத்துறை மிகவும் பலகினமாகவே இருக்கிறது.
இந்தியாவின்
சீதோசனநிலை மற்றும் நோய்கள்
பற்றிய சரியான படிப்பினை இங்கு இல்லை .
மேலும்,
இங்கு ஆராய்ச்சிகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .
மேலை நாடுகள்
ஏதாவது கண்டுபிடித்தால்
அதை வழிமொழிவதாகவே இருக்கிறது .
மருத்துவத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
உட்கருத்து ஊட்டப்பட்டே
படிப்பையும்,தொழிலையும் தொடங்குகின்றனர் .
அர்பணிப்புத்தன்மை அரசுக்கும் கிடையாது ,
மருத்துவத்துறையிலும் கிடையாது .
இவர்கள் உருவாக செலவிடப்படும் தொகை
இந்த நோய்வாய்ப்பட்டவர்களின் இரத்தம் .
அதை அவர்கள் உணர்வது கூட இல்லை .
ஒரு சிலரின் அர்ப்பணிப்பால் மட்டுமே ஏதோ
இத்துறை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .

எனக்குத் தெரிந்து
விஞ்ஞானிகள் எனக்கூறிக்கொள்வோர்
ஏழை மற்றும் வளர்ந்து வரும்நாடுகளில்
ஏற்படும் நோய்கள் பற்றி
கண்டுகொள்வதாகத்தெரியவில்லை .
அவர்களுக்கு
வளர்ந்த நாடுகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆய்வில்
அதிக வருமானம் ,
பேர்,
புகழொடு
மதிப்பும் ,
கௌரவமும் அளிக்கப்படுவதால்
ஏழை நாட்டில் வாழும் மனிதர்களை மனிதர்களாக
பார்க்கமுடியாமல் இருக்கலாம் .
ஆனால் ,
இந்தப்போக்கு வருத்ததை அளிக்கின்றது .

நோய் என்பது அனைவருக்கும் பொதுவானது .
இன்று ஏழை நாடுகளுக்கு வந்துள்ளது .
நாளை வளர்ந்த நாடுகளே உமக்கும் வரலாம் .
ஆதலால் ,
மனிதகுலம் காக்கும் விசயத்தில்
எமக்கு ,உமக்கு
என பாரபட்சம் பார்க்காமல்
சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகமாக உருமாறி
அனைவருக்கும் பயன்படும் வகையில்
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க
ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டுகின்றேன் .
இல்லாது போனால்
மனிதகுலம் நோயுற்று முடமாகி போகும் .

இறுதியாக ,
சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் என்னவெனில,
எங்களுரில் பரவிவரும் இந்த நோய்க்கு
உங்களில் யாராவது
உரிய மருந்து கண்டுபிடிப்பீர்கள் எனில்
நாங்கள் அனைவரும்
உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம் .
மனித குலம் முழுவதும்
உமக்கு கடைமைப்பட்டவர்களாவோம் .

Blog Widget by LinkWithin