Saturday, October 10, 2009

சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் ...

"நூறு மருத்துவர்கள் மத்தியில்
இறந்து கொண்டிருக்கின்றேன்" -அலெக்சாண்டர் தி கிரேட்.

"கோடி மருத்துவர்கள் மத்தியில்
கூனி வலியுடன் வாழ்கின்றோம் "- காந்தி காங்கிரஸ் .

சென்ற செப்டம்பர் மாதம் 3-ம் தேதி மதியம்
கோர்ட்டில் வழக்கு விவாதத்திற்குஅமர்ந்திருந்த
பொழுது வலது காலில் தாங்க முடியாதபடி பயங்கர வலி உடனேடாக்டரைப்பார்த்தேன் .
அவர் இப்பொழுதுதான் ஆரம்பம்
காய்ச்சல் 100 இருக்கு
நல்ல ரெஸ்டு எடுங்க என்றவர்
PARACETAMOL மாத்திரை மட்டும்
2 நாளைக்கு 3 வேளை சாப்பிட எழுதிக்கொடுத்தார் .
எனக்கு ஒன்றும் புரியவில்லை .
வீட்டிற்கு வந்த பிறகு காய்ச்சல் 104 யை
தொட்டது .
அதே நிலை 2 நாட்கள் நீடித்தது .
கை,கால் மற்றும் உடம்பில் JOINT னு
எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம்
தாங்க முடியாதபடி பயங்கர வலி .
டாய்லட் போனால்
எழுத்திருக்கவே முடியாத நிலை
அவ்வளவு வலி .
மேலும் ,
நடந்தால்,
உடல் நிலத்தை நோக்கி கூன் விழுந்த மனிதர் போல்தான் நடை .
டாக்டரை தினமும் பார்த்தேன் .
2 நாளில் காய்ச்சல் போய்விட்டது .
ஆனால் ,
கை,கால் மற்றும் JOINT வலி
இன்னும் போகவில்லை .
நடப்பதற்கே மிகவும் கடினமாக உள்ளது .
எந்த வேலையையும் சரியாக செய்யமுடிவதில்லை .
சோர்வாகவே தினம் கழிகின்றது .

இது பற்றி எனது மருத்துவ நண்பர்களை
கேட்ட பொழுது தயங்கிய படி
சில திடுக்கிடும் உண்மைகள் சென்னார்கள் .

இந்த நோய்க்குப் பெயர் சிக்கன் குனியாவாம் .
1952-ல் ஆப்பிரிக்காவில் இருப்பது அறியப்பட்டது .
2005-ல் இருந்து இந்தியாவில் அறியப்படுகின்றதாம் .
வைரஸ்களால் ஏற்படும்
இந்த நோய்
மருந்து மாத்திரைகள் எடுக்காமலே
காய்ச்சல் போய்விடும் .
ஆனால் JOINT வலி
அவரவர் உடல் வாகிற்கு ஏற்ப இருக்குமாம் .
எனது நண்பர் சென்னார்
அவருக்கு 3 வருடங்களாக வலி உள்ளதாம் .

காய்ச்சல் வந்து உடனே போய்விடுவதாலும் ,
இந்த நோய் இருப்பதாக ஒத்துக்கொண்டால்
சர்வதேச சமுகத்தினின்று
ஒதுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தினாலும்
அரசு இந்நோயை கண்டுகொள்வதில்லையாம் .

இந்த நோய் வந்தால்
மனிதனால் இயங்கவே முடிவதில்லை .
மிகவும் கடினமாக இருக்கின்றது .
ஆப்பிரிக்காவில் வாழும் மக்கள்
ஏற்கனவே கடின வாழ்வு வாழ்ந்து கொண்டு வரும் நிலையில்
இந்த நோயுடன் எப்படி காலத்தை கடத்துகின்றனரோ .
அவர்கள் மனிதாபிமானமில்ல மனிதர்களிடம்
வதைபடுவதோடு மட்டுமல்லமல்
கிருமிகளாலும் வதைபடுவதை நீனைக்கும்
பொழுது ,
என்ன உலகமடா ? .

(Following are the countries from where Chikungunya infection is
reported (as of March 2008),
Benin,Burundi,Cambodia,Cameroon,Central African Republic,
Comoros,Congo,East Timor,Gunea,India,Indonesia,Italy,Kenya,Laos
,Madagascar,Malawi,Malaysia,Mauritius,Mayotte,Myanmar,Nigeria
,Pakistan,Philippines,Senegal,Seychelles,Singapore,South Africa
,Srilanka,Sudan,Taiwan,Tanzania,Thailand,Uganda ,Vietnam
Zimbabwe.)


அதே போல் தான் ,
எங்க ஊரிலும்
அன்னாடும் காய்ச்சிகள் அதிகம் பேருக்கு
இந்த நோய் பரவியுள்ளது .
உழைக்கவும் முடியாமல் ,
வருமானமும் இன்றி ,
கடின வலியுடன் நகர்ந்து
கொண்டிருக்கின்றனர்
கூனி குருகி
எங்களின் ஈரோடு பகுதியைச்சுற்றி மட்டும்
சுமார் 5 லட்சம் பேர் .
இந்தியா முழுவதும் ....!!! ????.
இதைப்பற்றி யாருக்கும் இதுவரை எந்த அக்கறையும் இல்லை .
அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை .
அரசும் இதை கண்டு கொள்வதாக தெரியவில்லை .
அரசு இந்நோயை ஒத்துக்கொள்வதும் இல்லை
என்கின்றனர் விசயம் தெரிந்த மருத்துவர்கள் .

அரசு கண்டு கொண்டால் தான் ,
ஒத்துக்கொண்டால் தான்
இந்நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்க ஏதுவாகும் .
இதைத்தவிர்த்தால்
மனிதனின் ஆற்றல் எல்லாம்
சிக்கன் குனியா நோய்
ஏற்படுத்தும் கூனலுக்குல் தீர்ந்துவிடும் .

எனக்கென்னவோ
இன்றுள்ள அரசுகள்
'பெரும்பான்மை பேராசைக்காரர்கள் அமைப்பாக '
இருப்பதால்தான்
இத்தகைய நோய்கள் பற்றி கண்டு கொள்ளாமல்
அலட்சியப்படுத்துகின்றது எனத்தேன்றுகிறது .

'மக்களின் மீது அதிக அக்கறை கொண்ட அரசே
உயர்ந்த லட்சியம் கொண்டகுடிமக்களைப்பெற்றிருக்கும்'.

இன்று நாமுள்ள நிலையில்
சந்திரனுக்கு குடியேறுவதற்கும் ,
அணு ,ஆயுதம் தயாரிப்பதற்கும்
செலவிடும் தொகைகள்
யாருக்குப்பயன் அளிக்கப்போகிறது
எனத்தெரியவில்லை.
ஆனால் , அவைகள்
இந்த நோய்வாய்ப்பட்டவர்களின்
இரத்தத்திலிருந்தும் உரிஞ்சப்பட்டவைகள்
என்பது தான் நிதர்சனமான உண்மை .

நமது இந்தியாவைப் பொறுத்தவரை
மருத்துவத்துறை மிகவும் பலகினமாகவே இருக்கிறது.
இந்தியாவின்
சீதோசனநிலை மற்றும் நோய்கள்
பற்றிய சரியான படிப்பினை இங்கு இல்லை .
மேலும்,
இங்கு ஆராய்ச்சிகள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .
மேலை நாடுகள்
ஏதாவது கண்டுபிடித்தால்
அதை வழிமொழிவதாகவே இருக்கிறது .
மருத்துவத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
உட்கருத்து ஊட்டப்பட்டே
படிப்பையும்,தொழிலையும் தொடங்குகின்றனர் .
அர்பணிப்புத்தன்மை அரசுக்கும் கிடையாது ,
மருத்துவத்துறையிலும் கிடையாது .
இவர்கள் உருவாக செலவிடப்படும் தொகை
இந்த நோய்வாய்ப்பட்டவர்களின் இரத்தம் .
அதை அவர்கள் உணர்வது கூட இல்லை .
ஒரு சிலரின் அர்ப்பணிப்பால் மட்டுமே ஏதோ
இத்துறை இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .

எனக்குத் தெரிந்து
விஞ்ஞானிகள் எனக்கூறிக்கொள்வோர்
ஏழை மற்றும் வளர்ந்து வரும்நாடுகளில்
ஏற்படும் நோய்கள் பற்றி
கண்டுகொள்வதாகத்தெரியவில்லை .
அவர்களுக்கு
வளர்ந்த நாடுகளில் ஏற்படும் நோய்கள் பற்றிய ஆய்வில்
அதிக வருமானம் ,
பேர்,
புகழொடு
மதிப்பும் ,
கௌரவமும் அளிக்கப்படுவதால்
ஏழை நாட்டில் வாழும் மனிதர்களை மனிதர்களாக
பார்க்கமுடியாமல் இருக்கலாம் .
ஆனால் ,
இந்தப்போக்கு வருத்ததை அளிக்கின்றது .

நோய் என்பது அனைவருக்கும் பொதுவானது .
இன்று ஏழை நாடுகளுக்கு வந்துள்ளது .
நாளை வளர்ந்த நாடுகளே உமக்கும் வரலாம் .
ஆதலால் ,
மனிதகுலம் காக்கும் விசயத்தில்
எமக்கு ,உமக்கு
என பாரபட்சம் பார்க்காமல்
சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகமாக உருமாறி
அனைவருக்கும் பயன்படும் வகையில்
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க
ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டுகின்றேன் .
இல்லாது போனால்
மனிதகுலம் நோயுற்று முடமாகி போகும் .

இறுதியாக ,
சர்வதேச மனிதாபிமானம் கொண்டோர் சமுகத்திற்கு ஒரு வேண்டுகோள் என்னவெனில,
எங்களுரில் பரவிவரும் இந்த நோய்க்கு
உங்களில் யாராவது
உரிய மருந்து கண்டுபிடிப்பீர்கள் எனில்
நாங்கள் அனைவரும்
உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டவர்களாவோம் .
மனித குலம் முழுவதும்
உமக்கு கடைமைப்பட்டவர்களாவோம் .

11 comments:

Maximum India said...

உங்களுடைய ஆதங்கம் நியாயமானது. நோபெல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியது போல, ஆராய்ச்சிக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்போது போல எப்போதுமே நாம் ஒரு பின்தங்கிய நாடாகவே இருக்க வேண்டியிருக்கும்.

நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

எண்ணமும் அதன் எழுத்துக்களும் உயர்ந்த நோக்கமும் நிதர்சனம் உள்ளதுவாக இருப்பதினால் மனித நேயமும் நாட்டுப்பற்றும் (அறிதாகா) கொண்ட அரசின் அதிகாரம் கொண்ட எவரேனும் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படி செய்யலாம். அனால் ''அத்திப்பழத்தை புட்டால் அத்தனையும் சொத்தையாக வே " இருக்கிறேதே ! மக்கள் செல்லாகாசான ஜனநாயகம்.

எம்.ஏ.சுசீலா said...

அன்புடையீர்,
தங்கள் பதிவின் ஆதங்கம் புரிந்தது.மதுரையிலும் என் நண்பர்கள் பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு ஆற்றொணாத் துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.இப் பதிவும் கருத்தும் பலரைச் சென்றடைய வேண்டும்..குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்களையும், மருத்துவர்களையும்.அப்போதுதான் விடிவு பிறக்கும்.விரைவில் மருத்துவக் கண்டுபிடிப்பின் கூனல் நிமிரட்டும்.அதற்குத் தங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் உதவட்டும்.
எம்.ஏ.சுசீலா

velusamymohan said...

Nalla pathivu.Chikungunya can be prevented by eradicating mosquitoes,who is going to bother abt it ?

காந்தி காங்கிரஸ் said...

Maximum India ,
கக்கு - மாணிக்கம் ,
எம்.ஏ.சுசீலா ,
velusamymohan
அவர்களே,


தங்களின் பின்னூட்டத்திற்கும் ,
மனிதநேயத்திற்கும்
எனது முதற்கண் வணக்கம் .

மனித நேயம் கொண்ட ஒருவரால் தான்
இதற்கு உரிய தகுந்த விடிவு பிறக்கும் .
அத்தகையவரை காணும்வரை
நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும் .

மிக்க நன்றி .

நிகழ்காலத்தில்... said...

\\எங்களுரில் பரவிவரும் இந்த நோய்க்கு
உங்களில் யாராவது
உரிய மருந்து கண்டுபிடிப்பீர்கள் \\

அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவரை அணுகுங்கள்

தக்க பலன் கிடைக்கும், செலவோ மிகக்குறைவு

முயற்சித்து பின் எழுதுங்கள்

வாழ்த்துக்கள்

nsena from erode said...

it is a good article . the agonies experienced by u are felt by many in erode. keep witing and see erodelawyersena.blogspot.com

காந்தி காங்கிரஸ் said...

நிகழ்காலத்தில்...
அவர்களே.

எனது மருத்துவ நண்பர்,
ஈரோட்டிலேயே மிகவும்
பிரசித்தி பெற்றவர்.
அவரிடம் எனது உடல் வேதனையை கூறினேன்.
ஆங்கில முறை மருத்துவரான அவர்
தாங்கள் கூறியது போன்றுதான்
ஹோமியோபதி எடுத்துப்பாருங்கள் என்றார் .
எனக்கு ஒன்றும் புரியவில்லை .
நீங்களே நல்ல ஹோமியோபதி டாக்டரை
சொல்லுங்கள் என்றேன் .
சொன்னார்.
அதிலும் தோல்வி.

அதையும் முயற்சித்துப் பார்த்தாகி விட்டது.

தங்களின் வருகைக்கும் ,பின்னுட்டத்திற்கும்
மிக்க நன்றி .

காந்தி காங்கிரஸ் said...

nsena
அவர்களே.

தங்களின் வருகைக்கும் ,பின்னுட்டத்திற்கும்
மிக்க நன்றி .

நிகழ்காலத்தில்... said...

\\நீங்களே நல்ல ஹோமியோபதி டாக்டரை
சொல்லுங்கள் என்றேன் .
சொன்னார்.
அதிலும் தோல்வி.\\

:)) மருத்துவ முறையில் தவறேதும் இல்லை நண்பரே

தங்களின் மற்றும் மருத்துவரின் பொறுமை இன்னும் தேவை.,

திருப்பூர் வாருங்கள்..

காந்தி காங்கிரஸ் said...

அன்புள்ள நிகழ்காலத்தில்...
அவர்களே

தங்களின்
மதிப்புமிக்க அழைப்பிற்கும்,
ஆலோசனைக்கு
மிக்க மகிழ்ச்சி.

தங்களின் கரிசனத்தால்
அகம் மகிழ்ந்தேன் .

முடிந்தால் வருகின்றேன்.

மிக்க நன்றி .

Post a Comment

Blog Widget by LinkWithin