Friday, February 5, 2010

மும்பை யாருக்கு சொந்தம் - அரசுக்கு ஒரு யோசனை .










அச்சம்
.....,அச்சம்..... ,அச்சம் ......
சுதந்திரத்தை சுதந்திரமாக சுவாசிக்கமுடியத மும்பைவாசிகளாக .இதனால் மக்கள் அடையும்
மனரீதியான பாதிப்புகள் கணக்கிலடங்கா.அதோடு மட்டுமல்லாமல் இதனால் நமது நாட்டிற்கு
ஏற்படும் பொருளாதார பின்னடைவை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.இது நமது நாடு
இங்கு உள்ள அனைத்தும் நாமனைவருக்கும் சொந்தம் .
நாமனைவரும் கட்சிசார்பின்றி ஒற்றுமையாக இருந்து பிரிவினை பேசுகின்றவர்களை
எதிர்த்தால்தான் நாம் நாமக்கு கிடைத்த சுதந்திரத்தை சுதந்திரமாக சுவாசிக்கமுடியும்
.எனவே,நாமனைவரும் சொந்தம் கொண்டாடும் கூட்டத்தினரின் செயல் தவறு என்று நமது கடுமையான
கண்டனத்தை பத்திரிக்கைகள் ,வலைகள் ,தொலைக்காட்சிகள் ,ப்ளாக்குகள்,குறுஞ்செய்திகள் ,கடிதங்கள்
வாயிலாக இந்தியாவிலுள்ள அனைத்துப்பகுதிகளிலிருந்தும் ;வெளிநாடு வாழ் இந்தியர்கள் உட்பட
அனைத்து இந்தியர்களும் இந்தியர்களாக ஒன்றுபட்டு தெரிவித்தால் இத்தகைய சிறுமதி கூட்டம்
தங்களின் வாலாட்டத்தை நிறுத்திக்கொள்ளும். இதைப்படிப்பவர்கள் அனைவரும் இதனைச்செய்வீர்கள் என
நம்புகின்றேன் .

நானும் எனது கடுமையான கண்டனத்தை இதன் முலம் தெரிவித்துக்கொள்கின்றேன் .

அதோடு அரசுக்கும் ஒரு யோசனையை இதன்முலம் முன்வைக்கின்றேன். இது போன்ற பிரச்சனைகள்
எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் இருக்க மக்கள்தொகையை 50 லட்சத்தைத்தாண்டிய அனைத்து
பெருநகரங்களையும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குட்பட்ட தனி மாநிலமாக
ஆக்கிவிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாகவும் இருக்கும் மக்களும்
அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வர் .


.

.

.


19 comments:

எம்.ஏ.சுசீலா said...

தங்கள் கருத்து பாராட்டத்தக்கது.

காந்தி காங்கிரஸ் said...

நன்றி அம்மா

நட்புடன் ஜமால் said...

நடைமுறை சாத்தியம் தெரியவில்லை

இருப்பினும் யோசிக்கவைக்கும் யோசனை தான்.

தேவன் மாயம் said...

நல்ல சமுதாய சிந்தனை!!!! நீங்களெல்லாம் அரசியலில் இருக்க வேண்டும்!!!

காந்தி காங்கிரஸ் said...

முதலில் ,நடைமுறை படுத்தப்படும் என அறிவித்து பாருங்கள் .நகரங்களை பிரித்த பலி நம்மீது விழுந்துவிடும் என்ற ஓட்டுப்பொறுக்கும் பயம் ஓட்டுப்பொறிக்கி சில்லரைகளுக்கு ஏற்பட்டுவிடும் .உருப்படியா ஒன்னும் செய்யல ஊரையும் பிரிச்சுட்டான் என்ற கொட்டபேரேட எப்படி ஓட்டுப்பொறுக்க முடியும் .அதேடு மட்டுமல்ல பெருநகரங்கள் முழுவதும் உள்ளூர் அரசியலுக்கு அடிக்கடி இரையாவதால் நாட்டின் முன்னேற்றமும் தடைபடுகிறது .மேலும் தனிப்பட்ட உயர்தர பாதுகாப்பு பெருநகரங்களுக்கு அவசியமாக உள்ளது .மேலும்,மக்களை மக்களாக பார்க்காமல் மாநிலத்தவராக பார்க்கும் பாமரத்தனம் மறையும்.ஆதலால் கட்டாயம் இது தேவையாக உள்ளது .அவசியமான ஒன்றாகவும் உள்ளது .

தங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும்
மிக்க நன்றி
நட்புடன் ஜமால் அவர்களே
நன்றி.

காந்தி காங்கிரஸ் said...

மிக்க நன்றி
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி.

அண்ணாமலையான் said...

சரி வாங்க நானும் உங்க கவலையிலே சேந்துக்கறேன்...

காந்தி காங்கிரஸ் said...

வாங்க அண்ணாமலையான்
மகிழ்ச்சி
மிக்க நன்றி

துபாய் ராஜா said...

//மக்கள்தொகையை 50 லட்சத்தைத்தாண்டிய அனைத்து பெருநகரங்களையும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குட்பட்ட தனி மாநிலமாக
ஆக்கிவிட்டால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாகவும் இருக்கும் மக்களும் அச்சமின்றி
சுதந்திரமாக வாழ்வர்.//

அருமையான கருத்து. அப்படியே வழிமொழிகிறேன்.

காந்தி காங்கிரஸ் said...

வரவேற்கின்றேன்
துபாய் ராஜா அவர்களே
மிக்க நன்றி

M.Thevesh said...

ஆதிகாலத்தில் ஜம்பத்தாறு தேசங்கள் கொண்ட இந்தியத்துணைக்கண்டம்என்றேவழங்கப்பட்டது.பிரித்தானியர் தம் நிர்வாகவசதி கருதி ஏக இந்தியா ஆக்கினார்கள்.உங்கள் யோசனைப்படி செயல்பட்டால் காலப்போக்கில் ஜம்பத்தாறு தேசமாக பிரிந்து செல்ல சுலபமாகிவிடும். ஒவ்வொரு இனமும் எங்கள் இடம் பூமிபுத்திரர்களுக்கே முதல் உரிமை என்று கோசம் எழுப்பிவருகிறார்கள்.
தமிழன் மட்டும்தான் நான் இந்தியன் தேசஒற்றுமை
என்று கூக்குரலிட்டுவருகிறான்.வடநாட்டு எதிலும்
தமிழனை மனிதனாகவேமதிக்கிறான் இல்லை. தமிழ்
நாட்டைவிட்டு வடமாநிலம் போய் பாருங்கள் தமிழன் நிலைமையை.முதலில் சுயகவுரவத்தையும்
தன் மானத்தையும் நிலைநாட்டியபின்பு நான் இந்தியன் தேசியஒற்றுமை என்று கூக்குரல் இடுங்கள்.
தமிழனின் இளிச்சவாய்த்தனத்தினால்எல்லாமானி
லத்தவனும் தமிழ்நாடு வந்து இவன் தலையில் மிள காய் அரைக்கிறான்.அடிமைமனப்பான்மையில் இருந் து முதலில் வெளிவாருங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல சமுதாய சிந்தனை

காந்தி காங்கிரஸ் said...

முற்றிலும் தவறான புரிதல் ....
நான் பார்க்கும் இந்தியா ,காந்திஜி இந்தியா ....
நான் கூறும் தனி மாநிலம் முற்றிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் பாதுகாப்புமிக்க மத்திய மாநிலம் :நீங்கள் நினைக்கும் மாகாண மாநிலம் அல்ல .இங்கு ஒருவரை ஒருவர் அன்னியராகப்பார்க்க சட்டம் அனுமதிப்பதில்லை . இங்கு அனைத்து மாநில மக்களும் சமம் . இங்கு வசிப்பவர்களும் சரி,வந்து செல்பவர்களும் சரி ஒன்றுபட்ட ஒற்றுமையான இந்தியர்களாகவே இருக்கமுடியும். இங்கு தங்களிடையே எந்தவித அடையாளங்களும் இல்லாமல் சுயமரியாதையுடன் ,சகல உரிமையுடன் நாட்டுப்பற்றுடன் தங்களின் கடமைகளை உணர்த்து சுதந்திரமாக அச்சமின்றி வாழ்வில் அனைவரும் முன்னேற முடியும் .

அனைத்து ஊர்களும் பெருநகரங்களாகிவிட்டால் ;மாகாண மாநிலங்கள் மறைத்து ;ஒன்றுபட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் மாகாண மாநிலம் மத்திய மாநிலங்களாக முழுதும் வந்து ஓன்றுபட்ட ஒரே இந்தியாவாகிவிடும் .தாங்கள் கூறுவதுபோல்
// ஜம்பத்தாறு தேசமாக பிரிந்து செல்ல சுலபமாகிவிடும்.// என்பது கனவிலும் நடக்காது .

//தமிழனின் இளிச்சவாய்த்தனத்தினால்எல்லாமானி
லத்தவனும் தமிழ்நாடு வந்து இவன் தலையில் மிள காய் அரைக்கிறான்.//
//தமிழ் நாட்டைவிட்டு வடமாநிலம் போய் பாருங்கள் தமிழன் நிலைமையை.// நாம் அவர்களை மிள காய் அரைக்கிறான் என்று நினைப்பதால் அவர்களும் நம்மிது தவறாக நினைக்கின்றனர் அவ்வளவே .இதுவே இந்த முரணிற்கு காரணம். முதலில் இந்த எண்ணத்தினின்று விடுபடவேண்டும் . ஒருவரை ஒருவர் சகமனிதர்களாக பார்க்காமல் மத்த்தினராக ,இனத்தினராக,மொழியினராக பிரித்துப்பார்க்கும் பார்வை ஒருவகையான மனநோய் .சுதந்திர நாட்டினின்று அகற்றப்படவேண்டிய பெருநோய் .அறிவை வளர்த்தாமல் அடிமைத்தனம்,அடிமைத்தனம் என்று கூறுவது மூடத்தனம்.

இங்கு அனைவரின் சுயகவுரவத்தையும் தன் மானத்தையும் நிலைநாட்டவே முயற்சி.

''யாதும் ஊரே யாவரும் கேளிர் '' என்ற சங்கத்தமிழனின் கூற்றை முறைசெய்வோம் . சங்கத்தமிழனுக்கு இருந்த நல்லொண்ணம் நம்மிடம் இல்லாமல் இருப்பது மொழியை நாம் மதிக்காததையே காட்டுகிறது .அதனால்தான் இந்த இழிநிலை போலும்.


தங்களின் வருகைக்கும் ,பின்னுட்டத்துற்கும்
மிக்க நன்றி
Thevesh அவர்களே .

காந்தி காங்கிரஸ் said...

மிக்க நன்றி
Starjan ( ஸ்டார்ஜன் )
மிக்க நன்றி

M.Thevesh said...

உங்கள் கற்பனை வாதம் கற்பனையாகவே இருக்கும்
நடைமுறையில் இது நடக்கவாய்ப்பே இல்லை.
கற்பனை செய்வதற்கு உங்களுக்க்கு சுதந்திரம் இருக்கி
றது நன்றாகக்கற்பனை செய்துகொள்ளுங்கள். கற்பனை
உலகில் வாழும் உங்களுக்கு என் அனுதாபங்கள்
உரித்தாகட்டும்.

காந்தி காங்கிரஸ் said...

மிக்க நன்றி
Thevesh

Anonymous said...

அன்புடையீர் வணக்கம்,

தர்கவாதம் விடுங்கள் சகோதரர்களே. இருவரின் கூற்றும் தன் நிலைகளை ஆராய்ந்து தன் தேசத்திற்கென அக்கறை கொண்டு சிந்தித்த சிந்தனைகளின்றி வேறில்லை. நாளைய சமுதாய வளர்சிக்கான தன் யோசனை இதுவென்று சொல்ல யாவருக்கும் உரிமையுள்ள தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம். என்றாலும்; அதை விமர்சித்து இது அங்ஙனமல்ல என மறுக்கவும் பாராட்டவும் கூட பிறருக்கு சம உரிமையுண்டு. அதை ஏற்றதில், தன் கருத்திற்கு மாற்றுக் கருத்தையும் அனுமதித்ததில் உயர்ந்தீர்கள்.

//ஒருவரை ஒருவர் சகமனிதர்களாக பார்க்காமல் மதத்தினராக ,இனத்தினராக,மொழியினராக பிரித்துப்பார்க்கும் பார்வை ஒருவகையான மனநோய். சுதந்திர நாட்டினின்று அகற்றப்படவேண்டிய பெருநோய்//

இந்த உங்களின் சமநோக்கு சிந்தனை 'ஒவ்வொரு இந்தியரும் தலைமேல் சுமந்துத் திரியவேண்டிய சிந்தனை. மரமும் செடியுமென் ஜாதி என்று நினைப்பவன் தமிழன். ஆயினும் அந்த தமிழன் ஆங்காங்கே மிதிபடுவதே தேவேசின் வருத்தம். தேச அக்கறையில்லாதோர் உங்களின் பதிப்பை திறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் சொல்லும் யதார்த்தம் நம்மினத்திற்கு நாம் மதிக்கும் இந்தியா தேசத்தில் நிகழாமலுமில்லை.

எது நிகழ்ந்தாலும் கடந்து; என் இந்தியா தேசமென்றே மதிக்கும் நம் உணர்வு யாவருக்கும் புரிவதில்லை. அதலாம் தவிர்த்து "எல்லரும் ஓரினம்; எல்லோரும் ஓர் மக்கள்" என எல்லோரும் கருதின்; மெச்சத் தக்கதே!

இருவருக்குமே ஒரு தேசத்தானாய், நன்றியறிவிக்கிறேன்!

வித்யாசாகர்

காந்தி காங்கிரஸ் said...

தங்களின் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும்
மிக்க நன்றி
vidhyasaagar அவர்களே
நன்றி.

Shakthi said...

The count should be raised more. And there is lot of ways to increase security...

Note: Sir are u from perundurai??

Post a Comment

Blog Widget by LinkWithin