Monday, August 10, 2009

பெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே .

.


நேற்று ஈரோட்டில்
''பெரியாரின் எழுத்துக்கள் பற்றிய சர்ச்சை குறித்த''
பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்தேன் .
காலில் விலங்கிடப்பட்ட
பெரியாரின் கோலத்தை , பேச்சாளர்களின் இருக்கைகளின் பிண்ணனியில் ஒலியூட்டப்பட்டு
இருப்பது கண்டு ஆடிப்போனேன். அப்பொழுது அன்பர் ஒருவர் எனது கையில் சிற்றறிக்கை
ஒன்றை கொடுத்தார் .
அதில் ''குமுதம் '' வெளியிட்டிருந்த
கேலிச்சித்திரத்தை கண்டேன் .
மண்டை சுறப்பை ஏதோ அரித்தது .


ஒரு பகுத்தறிவாளரை ,
மனிதனை மனிதனாக மாற்ற நினைத்த மாந்தரை ,
சுதந்திரக்காற்றை ,
அறியாமை விலங்கொடிக்க பாடுட்டவரை -''கால் விலங்கி்ட்டு'' . வெம்பினேன்.
என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று இது .
அது கண்டு பெரியாரின் உண்மைத்தொண்டர்களாகிய நாம்
பெரியாருக்கு விலங்கிட நீ யார் ? உனக்கு என்ன தைரியம் ,அந்த தைரியத்தைக் கொடுத்து
யார் ?
எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் ,அதை பயன்படுத்தி பகுத்தறிவுப்பகல்வனை விலங்கிட்டு
அவமானப்படுத்துகிறாய் என குமுறி இருக்கவேண்டாமா ?.
எது எப்படியிருந்தாலும் பெரியாரை விலங்கிட நாம் அனுமதிக்கலாமா ?.
இது பகுத்தறிவா ?,
நாகரிகமா ?.
சரிதானா ?.
முறைதானா ? .


அது தவிர்த்து ,
மேடைக்கு மேடை
''காலில் விலங்கிடப்பட்ட பெரியாரின் கோலத்தை ,பேச்சாளர்களின் இருக்கைகளின்
பிண்ணனியில் ஒலியூட்டி ,சிற்றறிக்கையிலும் கொடுப்பது ''
மானமுள்ள
தமிழர்களாக ,பகுத்தறிவாளர்களாக நம்மை ஆக்கிய
பெரியாருக்கு
நாம் கொடுக்கும் மரியாதையாக எனக்குத் தெரியவில்லை .


உண்மையில்
நாம் பகுத்தறிவாளர்கள் தானா ?.
என்ற கேள்வியே என்னுள் எழுகிறது .

மாபெரும் அவமானம் பெரியாருக்கு - என அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன்.


இந்தப்பதிவின் முலம்
பெரியாருக்கு விலங்கிடலை வண்மையாக கண்டிக்கின்றேன் சகோதரர்களே.

இப்படிப்பட்ட தவறினை இனி் செய்யவேண்டாம் என எனதருமைச் சகோதரர்களை கேட்டுக்கொள்கின்றேன் .

''குமுதத்தை ''
இதன் முலம் மிகவும் வண்மையாகக் கண்டிக்கின்றேன் .


.

.

.


8 comments:

மேவி... said...

வாழ்ந்து மறைந்த தலைவர்களை ஏன் இன்னும் போட்டு இம்சை செய்றாங்க ன்னு தெரியல .........

சரியோ தவறோ ..... அவரோட கருத்துகளில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ... அவற்றை நாம் மதிக்க வேண்டும்...... இந்த மாதிரி கேலி சித்திரம் வரைவது ஒரு சென்சிடிவ் யான விஷயம் .... இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும்

vimalavidya said...

All the leaders should be respected. It basic thing. Periyar was best reformist in our time. His teachings created awareness among suppressed,oppressed and depressed.
---vimalavidya@gmail.com

நான் இந்துவல்ல; மானமுள்ள தமிழன் said...

காந்தி காங்கிரசுக்கு இருக்கும் அறிவு, பெரியார் பெயரில் கட்சி நடத்தும் பெரியார் தி.க.வுக்கு இல்லையே! இருந்தால், பெரியாருக்கு விலங்கிடப்பட்டது போன்ற படத்தை விளம்பரப்படுத்துவார்களா? மடையர்கள்!

பித்தனின் வாக்கு said...

nalla katturai ithu periayrukku vilangu itta seyalai annmigavathiyana naum kandikkiran. nangal teendamaiyai illamai akkia oru periya thalaiver avar. avarukku vilankittathu kovlamana seyal. annal ungalai ponra puthi ketta pagutharivalarkalukku ithu ethirkinra seyal alla, oru nattle perumpanmaiya makkal vanankum theivangalai migavum kiltharamaga vimarsanam seiyum enna puthi udaiyavarkal ithai ponra kovalangalyum vemasanam seiya thakuthi illai, enbathu enn karuthu. muthalil neengal aduthavar ennankalai mathikka karthu kollungal. pin ungalin karthukal aduthavarkal mathiparkal.

காந்தி காங்கிரஸ் said...

நன்றி
டம்பி மேவீ

காந்தி காங்கிரஸ் said...

நன்றி
vimalavidya

காந்தி காங்கிரஸ் said...

நன்றி
நான் இந்துவல்ல; மானமுள்ள தமிழன்

காந்தி காங்கிரஸ் said...

மனிதனை மனிதனாகப்பார்க்காத
ஒன்றைத்தான்
பெரியாரும் ,நாங்களும்
மனிதனை மனிதனாக பார்ப்பதில்லை எனக்கூறிகின்றோம் .
அது உம்மைப்போன்றோருக்கு
எதிர்க்கின்றோம் எனப்படுகிறது .
அதற்குப்பெயர்தான் அறியாமை .
அதிலிருந்து உங்களை விடுபட வைக்கத்தான் 'உங்களின் பாஷையில்'
எங்களின் கீழ்த்தரமான விமர்சனம் ,எதிர்ப்பு
இப்படி PITTHAN .

Post a Comment

Blog Widget by LinkWithin