Tuesday, July 21, 2009

பிரபல பதிவர் எனும் போதை .

மதிப்பிற்குரிய கும்மாச்சி அவர்களுக்கு,
இதை நான் தங்களுக்கு பின்னூட்டமாக கூற
நினைத்தேன் .ஆனால் , பின்னூட்டமாக கூறும் நல்ல விசயங்கள் கூட பல தடவைகள் வெறும்
மொக்கைகளாக ஆக்கிவிடுகின்றனர் என்பதோடு சொல்ல வந்த விசயத்தையே
திசை திருப்பியும் விடுகின்றனர் மொக்கையர்கள் என்பதால் தனிப்பதிவாகவவே
இதனை இட்டு தங்களின் பார்வைக்கும் வைக்கின்றேன் .

முதலாவதாக ,பதிவுலகில் பதிவிடுபவர்கள் பெரும்பாலும்
கணினி துறைசார்ந்து
இருப்பவர்கள் ,பிறகு சற்று பத்திரிக்கைத்துறை
சார்ந்து ,மற்றவர்கள் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் .
கணினி துறை மற்றும் அது சார்ந்து பணியில் இருப்பவர்களுக்கு
பணிப்பளு மற்றும் இதர
மன ,பண அழுத்தங்கள் காரணமாக ஏதாவது ஒரு புற வடிகால் தேவையாக உள்ளது .
புற வடிகாலுக்கு
பலர் வேறு மார்க்கம் தேடி தீர்த்துக்கொள்ளும் நிலையில் , அதற்குப்பயந்த
ஆனால் , நல்ல சிந்தனையுள்ளவர்கள் முதலில் தன் ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களை பதிவுலகில்
மொக்கைகள் முலம் அடையாளம் காண்கின்றனர் .
ஒவ்வொருவரும்
தனது கடினங்களை ,
தெரிந்ததை ,கண்டதை துறை பணி தவிர்த்து, தன்னை அமிழ்த்திய விசயங்களில் ஏற்பட்ட மன ,பண
அழுத்தத்திலிருந்து அதை வேறுவடிவில் வெளிப்படுத்தி விடுகின்றனர் தங்களுக்குத்தெரியாமலே .
பின் மெல்லமெல்ல அது சமுகத்தின் மீது பயணிப்பது சந்தர்ப்பத்தைப் பொறுத்து .

கொடும் பசியுடன் இருப்பவனுக்கு உணவைத்தவிர வேறு எதைக்கொடுத்தாலும்
என்ன ஆகும் .இப்படி நினையில் தான் இருககு பதிவுலகம் .
அப்படியிருக்க ,நீங்கள் நல்ல பதிவை போட்டா யார் ஓட்டுப்போடுவா .
இருந்தாலும் ,சில நல்ல பதிவர்களும் உளர் .அவர்கள் தான் நீங்கள் கூறும் நல்ல பதிவுக்கு
ஆதரவாக அமைகின்றனர் .
ஆனால் ,மற்ற சிலர் மொக்கைப்பதிவிலே லயித்து தங்களின் மன அழுத்தத்தை
ஆற்றிக்கொள்பவர்கள் .அவர்களுக்கு அது போதை .
அவர்களுக்கு
அது பிடித்துவிட்டது .அங்கு அவர்கள் பிரபலமாகி விட்டார் .மேலும் ,புகழ் என்னும்
போதையும் சேர்ந்துகொள்ள அவர்கள் அதற்கு நிரந்தர அடிமையாகி தனக்கு ஆதரவாக உள்ள ஒருவர்
எதை எழுதினாலும் ஓட்டும் ,பின்னூட்டமும்
போட்டு தங்களை அந்த நிரந்தர போதையிலேயோ வைத்துக்கொள்வர் .
நீங்கள் அன்னாரின் போதைக்கு சரியான டோஸ் ,அதாவது அவரிகளின் பதிவிற்கு ஒன்று ஓட்டு
அல்லது பின்னூட்டம் அல்லது இவை இரண்டும் கொடுக்கவில்லையென்றாலும் , அல்லது நல்ல பதிவுகளை
நீங்கள் போட்டு அவர்களுக்கு சலாம் போடாவிட்டாலும் ,அவர்கள் உங்களை ஓரம் கட்ட தங்களால்
முடிந்த டெக்னிக்குகளை கையாள்வார்- ப்ளாக் மாயம் மற்றும் COUNTING ERROR போன்ற
கிரிமினல் வேலைகளை மோற்கொள்வார்கள் . மற்றும் தங்களின் சகாக்களின் உதவியுடன் சதிகளும்
இங்கு சகஜம் .மேலும் வன்முறையைத்துண்டுகிறது ,அடுத்தவர் மனத்தை புண்படுத்துகிறது என
ஏதாவது கூறி உங்கள் ப்ளாக்கை தடைவிதிக்கவேண்டும் என கோசமும் போடுவர் .
அதற்கு கோஷ்டியும் சேர்ப்பர் .
ஆனால் ,அவர்களின் பின்னூட்டங்களை நீங்கள் பார்த்தீர்களெனில் அவர்களின் அசிங்கமான மனேநிலை
தெரியும் .
இப்படிப்பட்டவர்களினால்தான் நல்ல பதிவுகள் மறைக்கப்படுகிறது .
இது ஒருவகையான மன நோய் .
நல்ல புத்தகங்களை ,பதிவுகளை அவர்கள் படித்து தெளிவதைத்தவிர வேறு வழியில்லை .
இல்லையெனில் காலப்போக்கில் பதிவுலகம் அவர்களை வடிகட்டிவிடும் .இவர்களின் செயலுக்காக
பதிவுலகம் பின்னாளில் வருத்தப்படும் .

இந்தப்பதிவுக்கு அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினின்று தாங்கள்
அத்தகையவர்களை எளிதாக கண்டுகொள்ளலாம் .

நல்ல பதிவுகள் நல்லவர்களிடம்
சென்றடையாமல் இருப்பதில்லை.
யாராலும்
உண்மையை
மறைக்கவோ ,நிராகரிக்கவோ இயலாது .

32 comments:

jothi said...

//உண்மையை
மறைக்கவோ ,நிராகரிக்கவோ இயலாது . //

உண்மைதான். சிறந்த பதிவர் தோற்பதில்லை. எத்தனையோ புது பதிவர்கள் சிறப்பாய் எழுதிக்கொண்டு உள்ளனர். ஒரு பதிவு நல்ல பதிவு என நீங்கள் நினைக்கும்போது அதை எல்லோருக்கும் வெளிக்கொணர உங்காளான உதவியை செய்யுங்கள். கண்டிப்பாக,.. நல்ல பதிவுகள் பூக்காமலே வாடக்கூடாது,..

செந்தழல் ரவி said...

correct.......

காந்தி காங்கிரஸ் said...

//ஒரு பதிவு நல்ல பதிவு என நீங்கள் நினைக்கும்போது அதை எல்லோருக்கும் வெளிக்கொணர உங்காளான உதவியை செய்யுங்கள்//
கட்டயம் நான் செய்வேன்,நான் என என்று மட்டும் பிரிக்கவேண்டாம் நாம் செய்யவேண்டும் என கூறுவோம்.
நன்றி jothi

காந்தி காங்கிரஸ் said...

தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி
செந்தழல் ரவி

ஆ.ஞானசேகரன் said...

//யாராலும்
உண்மையை
மறைக்கவோ ,நிராகரிக்கவோ இயலாது . //

உண்மை

'இனியவன்' என். உலகநாதன் said...

நீங்கள் சொல்வது உண்மைதான்.

கோவி.கண்ணன் said...

உங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன். ஒரு நாளைக்கு 500 பதிவு வரை வருகிறது, எது சிறந்த பதிவு என்று படித்து பார்த்தால் தெரியும் அத்தனை பதிவையும் படிப்பதற்கு யாருக்குமே நேரம் கிடையாது. வாசகர் பரிந்துரைகளில் பல பதிவுகள் குழுவாகத்தான் இடம் பெறுகிறது. பொதுவாக வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பதே இல்லை

காந்தி காங்கிரஸ் said...

நன்றி ஆ.ஞானசேகரன்

காந்தி காங்கிரஸ் said...

நன்றி 'இனியவன்' என். உலகநாதன்

காந்தி காங்கிரஸ் said...

அப்படித்தான் உள்ளது .
சரியாகச்சொன்னீர்கள்.
நன்றி கோவி.கண்ணன் .

யுவகிருஷ்ணா said...

நல்ல பதிவு.

காந்தி காங்கிரஸ் said...

நன்றி யுவகிருஷ்ணா

Krishna Prabhu said...

Nice blog...

shortfilmindia.com said...

நைஸ்

கேபிள் சங்கர்

தஞ்சாவூரான் said...

தம்பி, உன் கருத்துகளுடன் உடன்படுகிறேன். நிறைய நல்ல பதிவுகள் வெளிவந்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். பதிவுலகமும், அரசியலுலகம் போல் ஆகிவிட்டது. ஜால்ரா சத்தங்கள், தனிமனித போற்றல்கள்தான் அதிகமாக இருக்கின்றன (பெரும்பாலும்!).

கும்மாச்சி said...

காந்தி உங்களுடையக் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன், என் ஆசிரியரைப் பற்றிய நல்ல நடையுடன் ஒருப் பதிவு போட்டேன், அது தமிளிஷில் நான்கு வோட்டுதான் வாங்கியிருக்கிறது. மொக்கைப் பதிவு, எதோ ஒரு அரைகுறை அழகியின் புகைப்படத்துடன் போட்டால் வோட்டை அள்ளுகிறது. இந்த வலைத்தளமெல்லாம் ஒரு வெகுஜன தளம் என்பது நன்றாகப் புரிகிறது, இருந்து என் ஆதங்கத்தை ஒரு மொக்கை கவிதை என்றப் பெயரில் "ஒண்ணுமே புரியலே உலகத்திலே" மெட்டிலேப் போட்டால் எவ்வளவும் வோட்டுகளும் பின்னூட்டங்களும் வருகின்றன.மொத்தத்தில் என்னைப்போல நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

காந்தி காங்கிரஸ் said...

நன்றி Krishna Prabhu

காந்தி காங்கிரஸ் said...

நன்றி கேபிள் சங்கர்

காந்தி காங்கிரஸ் said...

பெரும்பாலும் அல்ல அப்படித்தான் அனைத்தும் .
jothi கூறியதுபோல் சிறந்த பதிவர் தோற்பதில்லை.
நல்ல பதிவுகளை விருப்புவெறுப்பற்று வரவேற்போம் .அனைத்துத்தளங்களிலும் எடுத்துச்செல்வோம் .
நன்றி தஞ்சாவூரான் .

காந்தி காங்கிரஸ் said...

தங்களின் அனுபவ பதிவினால் தான் பதிவுலக அபத்தங்கள் சில வெளிச்சத்திற்கு வந்துள்ளது .
அந்த அளவிற்கு ஒரு நல்ல பதிவு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் .
உங்களின் மொக்கை பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் சில அபத்தங்கள் .
நான் இதுபோன்றவைகளை அனுமதிப்பதில்லை .
மேலும் , பதிவின் தரம் அதன் உள்ளடக்கத்தில் அமையும் ,பதிவரின் தரம் அவரின் முந்தைய பின்னூட்டங்கள் நிர்ணயிக்கும் .
அவ்வளவே .

//என்னைப்போல நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள் //
ஆம் ,
மொக்கைகளின் வெத்துசலசலப்புக்கு அஞ்சி .
நமக்கேன் வம்பு ,ஊருடன் ஒத்துவாழ்வோம் என்று தங்களை தோற்றிக்கொண்டு.
உண்மையை கூறினால் கிடைக்கும் ஓட்டுக்கள் கூட கிடைக்காது என்ற அச்சத்தில் பதிவுலக பாமரர்கள் .

திரட்டிகள் சில மொக்கையர்கள் அதிகம் இருந்தால்தான் நல்லது (அதிக நபல்கள் கொண்ட,பார்வையிடும் திரட்டி என).இல்லாவிட்டால்
விளம்பர வருமானம் பாதிக்கும் ,
நமக்கேன் வம்பு ,மொக்கையர்களுடன்
ஒத்துவாழ்வோம் என்ற நிலையில் .


இப்படி இருக்கும் நிலையில் நம்மைப்போன்று நிறைய பதிவர்கள் ....

நன்றி கும்மாச்சி

SanjaiGandhi said...

காந்தி காங்கிரசா? :))

காந்தி காங்கிரஸ் said...

ஆம் , காந்தி காங்கிரசே தான்
SanjaiGandhi

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இப்படி கூட ஒரு கோணம் இருக்கிறதா தல...,

காந்தி காங்கிரஸ் said...

இப்படி கூட ஒரு கோணம் அல்ல ...
இது தான் ...
நன்றி SUREஷ் .

MayVee said...

உண்மை தானுங்க ...

MayVee said...

நீங்க ஹைதை பதிவாளரை சொலுரிங்க ல

கார்க்கி said...

//நீங்க ஹைதை பதிவாளரை சொலுரிங்க ல//

டம்பி மேவீ, அவரு வாச்கர் பரிந்துரையில் வருபவ்ர்ன்னு சொல்றாரே.. எனக்கு என் ஓட்டு மட்டும்தான் விழுது...

காந்தி, நல்லா எழுதறீங்க. சீக்கிரமே பிரபல பதிவர் ஆயிடுவீங்க..

MayVee said...

"டம்பி மேவீ"

romba thanks karki

MayVee said...

illai karki...

unga blog yai naan niraiya perukku recommend panni irukken ... athai porulittu thaan naan kurinen

காந்தி காங்கிரஸ் said...

நன்றி MayVee &கார்க்கி .

வெ.இராதாகிருஷ்ணன் said...

எந்த பதிவு சிறப்பு, எது சிறப்பு இல்லை என்பதை வாசிப்பவரின் மனநிலையைப் பொருத்து அமைகிறது. கும்மாச்சி அவர்களின் பதிவினை இன்னும் படிக்கவில்லை, மேலும் எனக்கு இந்த வலைப்பதிவு உலகம் புத்தம் புதியது. பலர் சிறப்பாகவே எழுதுகிறார்கள். நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் குறித்து அதிக அக்கறை செலுத்தும் எண்ணம் இல்லை, எழுதும் நோக்கம் மட்டுமே எனக்கு. எத்தனை பேர் வாசித்தார்கள், எத்தனை ஓட்டுகள் எனக் கணக்கு இருந்தாலும் அது ஒரு கணக்குக்காகத்தான், மற்றபடி அது எனது எழுத்தை நிர்ணயிக்கும் ஒரு முடிவாக அமைந்துவிடாது.

புற வடிகால் என நினைத்து எழுதுபவர்களாகவே இருந்தாலும் இதனால் அவர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள் என்பதிலும் உண்மையில்லாமல் இல்லை. நிச்சயம் நல்ல பதிவுகள் பலரால் போற்றப்படும், படிப்பவர்களுக்கு நல்ல உறுதுணையாக இருக்கும். தங்கள் எழுத்துக்கு மிக்க நன்றி.

காந்தி காங்கிரஸ் said...

//எந்த பதிவு சிறப்பு, எது சிறப்பு இல்லை என்பதை வாசிப்பவரின் மனநிலையைப் பொருத்து//

அது பதிவைப்பொருத்து அமையும் .


//நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் குறித்து அதிக அக்கறை செலுத்தும் எண்ணம் இல்லை, எழுதும் நோக்கம் மட்டுமே எனக்கு.//

அக்கறையில்லா ஆக்கம் உருவாகாது .


//எத்தனை பேர் வாசித்தார்கள், எத்தனை ஓட்டுகள் எனக் கணக்கு இருந்தாலும் அது ஒரு கணக்குக்காகத்தான், மற்றபடி அது எனது எழுத்தை நிர்ணயிக்கும் ஒரு முடிவாக அமைந்துவிடாது.//

ஒரு ஆக்கம் ஆக்கமாகுமானால் படைக்கும் ஒருவரால் மட்டும் அதுமுடிவு செய்யப்படும் விசயமன்று .
அப்படி இருக்க எத்தனிப்பது ஆக்கமும் அன்று .

இது தவிர்த்து ஒருவருடைய எழுத்தை யாரும் நிர்ணயிக்கமுடியாது .

ஒருவரின் டைரிக்குறிப்பை யாரும் நிர்ணயிக்கமுடியாது .

அவ்வளவே .


நன்றி வெ.இராதாகிருஷ்ணன் .

Post a Comment

Blog Widget by LinkWithin